பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வாருங்கள் பார்க்கலாம் தனையோ பழைய நூல்கள் இப்படி விதேக முக்தி பெற்றிருக்கிற நாடு அல்லவா இது ? பிரம்மாண்ட புராணத்தில் தல விபவ கண்டத் தில் இந்தத் தலத்தின் பெருமை வருகிறதாம். உமா தேவியார் இங்கே அர்ச்சித்தாராம். திருமால் பூசித் தாராம். சண்டேசர் வழிபட்டாராம். கருடன் வழி பட்டு நஞ்சின் வாதை தீர்ந்தானும். நரசிங்கமுகன் யரையர் உற்சவம் நடத்தினர். சுந்தரமூர்த்தி சுவாமி கள் வழிபட்டதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இவற்றையெல்லாம் அந்தப் புராணம் எடுத்துச் சொல்கிறது. கோயில், கோபுரம், அழகான திருவுருவங்கள், புராணம், சுந்தரர் தேவாரம் எல்லாம் பெற்ற திருத் தலம் திருநாவலூர். அங்கே சென்ருல் கூட்டம் இன்றி, பரபரப்பு இல்லாமல் அமைதியாகப் பக்த ஜனே சு வர ரை யும், மனேன்மணியம்மையையும் சுந்தர மூர்த்தியையும், நரசிங்கமுனேயரையரையும் தரிசித்து இன்புற்று வரலாம்,