பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் கல்லூர்ப் பித்தன் 131 மீண்டும் வந்து சேர்ந்தது போன்ற பற்று, பசை யுணர்வு, ஈடுபாடு, ஆரூரர் உள்ளத்தில் முளைத்தது. “பிராம்மனேத்தமரே, வாருங்கள். இவ்வளவு பெரியவர்கள் இந்தக் கல்யாணத்துக்கு வந்திருப்பது எங்கள் தவப்பயன் என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள்’ என்று நம்பியாரூரர் அன்போடு சொன்னர். "இந்தக் கல்யாணம் நடப்பதற்கு முன்னுல், எனக்கும் உனக்குமிடையே ஒரு வழக்கு இருக் கிறது; அதைத் தீர்க்க வேண்டும்.' “வழக்கா !” மற்றவர்கள் வியந்தார்கள். "அப்படியா? அது என்ன வழக்கு? அதைத் தீர்த்து வைத்துவிட்டுப் பிறகு கல்யாண காரியத்தில் புகுகிறேன்” என்று ஆரூரர் சொன்னர். கிழவர் இப்போது ஆரூரரை மாத்திரம் பார்க்க வில்லை. கூட்டத்தில் இருந்த மறையோர் அனே வரையும் பார்த்து, “பிராம்மணர்களே, என் வழக் கைக் கேளுங்கள். நாவலூரில் உள்ள இந்த நம்பி ஆரூரன் என் அடிமை' என்று உரக்கச் சொன்னர். "இந்தக் கிழம் என்ன உளறுகிறது?’ என்று பெண் வீட்டுக்காரர்கள் கோபம் கொண்டார்கள். "இந்தப் பேர்வழி என்ன சொல்லுகிருர்?' என்று அசட்டையாகச் சிலர் பார்த்தார்கள். "இவர் பாவம், பைத்தியம்போல் இருக்கிறது' என்று சிலர் சிரித்தார் õ6ዥ• . ஆரூரருக்கும் சிரிப்புத்தான் வந்தது. இந்தப் பிராம்மணர் வார்த்தை நன்ருயிருக்கிறது!’ என்று எண்ணிச் சிரித்தார்.