பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வாருங்கள் பார்க்கலாம் அந்தச் சிரிப்புக் கிழவரிடம் கோபத்தை மூட்டி யது. "நான் சொல்கிறேன். நீ சிரிக்கிறயே! இது என்ன விளயாட்டா? என்று சொல்லிக்கொண்டே மேல் வேட்டியைப் பிரித்து, “இங்கே பார்த்தாயா? உன்னைப் பெற்ற அப்பனுக்கு அப்பன் எழுதிக் கொடுத்த அடிமையோலே இருக்கிறது. ஏதோ சொல்கிறேனென்ரு நினைத்தாய்?’ என்று படபடப் பாகச் சொன்னுர் அவர். அதைக் கண்டவுடன் ஆரூரர் சிரிப்பை மாற்றி ஞர். அவர் மனசுக்குள் ஏதோ நெகிழ்ச்சி உண்டா யிற்று. ஆல்ை அந்தணருடைய வார்த்தைகளோ எங்கும் இல்லாத புதுமையாக இருந்தன. இந்தப் பிராம்மணர் கூறுவது அதிசயமாக இருக்கிறதே. பிராம்மணர் பிராம்மணருக்கு அடிமையாவது இது வரைக்கும் கேட்டதே இல்லையே! இவர் பித்தரோ? என்ருர், கிழவர் சும்மா விடுபவராகத் தோன்றவில்லை. 'பித்தனுகட்டும், பேயணுகட்டும். நீ என்ன வேண்டு மாலுைம் சொல்லிக்கொள். அதற்காக நான் வெட் கப்படவும் இல்லை; பயப்படவும் இல்லை. என் உரிமை உனக்குத் தெரியவில்லே. வீண் வாய் வீரம் ஏன் பேசுகிருய்? நீ எனக்கு அடிமை செய்ய வேண்டும். நான் உன்னே விடப் போவதில்லை' என்று மிடுக்குக் குறையாமல் பேசினர். 'இதென்ன, இவர் இப்படிப் பேசுகிருரே! இவ ரைக் கண்டால் என் மனசு இவரிடம் போய் ஒட்டிக் கொள்கிறது; உருகுகிறது. ஆளுல் இவர் பைத்தியக் காரத் தனமாகச் சொல் கிற வார்த்தையோ