பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் கல்லூர்ப் பித்தன் 1 41 தன்ைேடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு முயற்சி செய்து கொண்டே இருக் .கிருள். அவ்வாறே இறைவன் ஆருயிர்களேயெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிருன் , தன் கருணைக் கரத்தினலே அணைக்க வேண்டுமென்று முயல்கிருன். நாம் செய்கிற பக்திக்கு அதிக ஆற்றல் இருக்கிறதென்று நினைக்கிருேம். அது வெறும் வியா ஜமாத்திரம். 'எப்படியாவது இவன் நம்மை அண்ட வேண்டும். இவன் நம் பக்கம் திரும்புகிருளு?’ என்று ஆண்டவன் பார்த்துக் கொண்டே இருக்கிருன். அவனே நோக்கி நாம் ஓர் அடி எடுத்து வைத்தால், அவன் நூறு,ஆயிரம் அடிஎடுத்து வைத்து வேகமாக வருகிருன். ‘அப்பா வந்தாயா?’ என்று மிக்கஆர்வத் தோடு நம்மை அணேந்துகொள்ள வருகிருன். நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்று எம்பெருமானுக்கு உள்ள கருணையின் வேகம் மிகுதியானது. அவன் எடுக்கும் திரு அவதாரங்களுக்கும், அவன் செய்யும் திருவிளையாடல்களுக்கும், கொள்ளும் கோலங்களுக் கும் இந்தக் கருனேயே காரணம். அது ஒரு பித்து அல்லவா ? குணம் குறி ஒன்றும் இல்லாத பரப்பிரம் மமாகிய கடவுள் எல்லா விதமான காரியங்களேயும், பராக்கிரமங்களையும், அவதூறுகளையும், புகழ்களையும் ஏற்றுக் கொள்வதற்குக் காரணம், ஆருயிர்களே மீட் கடும் தனக்கு அடிமையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற அருள் நினைவுதான். அந்தக் கருணையால் அவன் பித்தாகித் திரிகிருன், சுந்தரமூர்த்தி நாயனர், முன்பு ஆண்டவ னுடைய திருவருளே நிரம்பப் பெற்ற ஆலாலசுந்தரர்.