பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வாருங்கள் பார்க்கலாம் ஆயினும் இவ்வுலகில் பிறந்த பின் சில காலம் அவனை மறந்திருந்தார். உலக வாழ்விலே இன்பம் பெற வேண்டும் என்று கருதித் தாய் தந்தையர் திருமணத் துக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தத் திருமணம் ஆகியிருந்தால் நாவலாரூரர் ஆண்டவனுடைய அடிமையாக இராமல் உலகத்தின் அடிமை யாகியிருப்பார். அ ைத மாற்றுவதற்காகப் பித் தேறி நின்றன் எம்பெருமான்; நாவல் ஆரூரரை ஆண்டு இவர் மூலமாக உலகத்துக்கு நல்லருளைக் காட்ட வேண்டும் என்று கருதின்ை. இவற்றையெல்லாம் நினைத்தால், சுந்தரர் தம் சொல் அர்ச்சனையை, "பித்தா' என்று தொடங்கி யது எவ்வளவு பொருத்தமாகத் தோன்றுகிறது! 2 திருவெண்ணெய்நல்லூர்ப் பித்தனைத் தரிசித்து வரலாம் என்று புறப்பட்டேன். வெளியிலே ராஜ கோபுரம் தனியே இங்கே இல்லே. இடை நிலைக் கோபுரந்தான் இருக்கிறது. கோயிலுக்குள் நுழை வதற்கு முன் வாயிலுக்கு எதிரே சுவாமி சந்நிதியை நோக்கி உள்ள ஒரு சிறு கோயிலைக் கண்டேன். பெருமாள் கோயிலில் பெரிய திருவடிக்கு அப்படிக் கோயில் அ ைம ந் தி ரு க் கு ம். இது என்ன சந்நிதி?” என்று கேட்டேன். 'இதுதான் சுந்தர மூர்த்தி நாயனர் சந்நிதி' என்று கோயில் குருக்கள் சொன்னர். “கோயிலுக்குள் அல்லவா சுந்தரர் சந்நிதி இருக்க வேண்டும்? இங்கே இருக்க ஏதாவது காரணம் உண்டா?” என்று விசாரித்தேன்.