பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் கல்லூர்ப் பித்தன் 143; “சுந்தரர் ஆவணம் காட்டிய கிழவரைத் தொடர்ந்து வந்தபோது இங்கே நின்றபடியே இறைவ. னுடைய காட்சியைக் கண்டார். அதோ பாருங்கள். கோயிலில் அலங்கார மண்டபத்துக்கு மேலே ஒரு சிறிய கோயில் மாதிரி மேல்தளத்தில் இருக்கிறதே, அதுதான் தடுத்தாட் கொண்டார் உள்ள இடம். இங்கிருந்து சுந்தரர் அங்கே தோன்றிய இறைவனைத். தரிசித்தார்' என்று கூறிஞர்கள். தடுத்தாட்கொண்டார் அந்தக் கோயிலுக்குள் சுதையுருவில் இடபாருடராய் எழுந்தருளியிருக்கிருர், அங்கே ஏறிப் போக வழியில்லே. அம்மூர்த்திக்குப் பூசை முதலியன இல்லை. ‘இறைவன் அங்கே தோன்றி உடனே மறைந்தருளினன். அதை நினைக். கும் சின்னந்தான் அது' என்று விளக்கினர்கள், உடன் இருந்த அன்பர்கள். சுந்தரர் கோயில் தெருவின் கோடியிலே இருந்த, தாம். இடையில் ஒரு காலத்தில் அயல் மதத்தினர் இந்தப் பக்கங்களில் வந்து தம் அரசுரிமையை நாட்டியபோது கலாபம் நிகழ்ந்ததாம். அப்போது, சுந்தரர் கோயிலே இடித்து விட்டார்களாம். அதனல் இங்கே கோயில் வாசலுக்கு எதிரில் புதிதாக இந்தச் சந்நிதியைக் கட்டியிருக்கிருர்களென்று தெரிய வந். தது. ஓர்ம் (Orine) என்ற ஆசிரியர் எழுதியுள்ள வரலாற்றில் இந்தப் பக்கங்களில் பல இடங்களில் போர் நிகழ்ந்ததாகக் குறித்திருக்கிருர். 1760-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திருவெண்ணெய் நல். லூரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்களாம். சுந்தரர் சந்நிதிக்குச் சென்று, 'சுவாமி, நீங்கள் அருள் பெற்ற அருள்துறைக்கு வந்திருக்கிறேன்.