பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 வாருங்கள் பார்க்கலாம் உமக்குக் கிடைத்த அருளில் எள்ளளவாவது எனக் குக் கிடைக்கும்படி கிருபை செய்ய வேண்டும்: என்று பிரார்த்திக்கொண்டு அவரை அணுகினேன். உற்றுப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அங்கே சுந்தரமூர்த்தி இல்லை. திருஞானசம்பந்தர் கையில் தாளத்துடன் நின்றர். நன்ருகக் கவனித்தேன், நிச்சயமாக ஆளுடைய பிள்ளேயாரே! குழந்தைக் கோலத்தில் ஆடை புனேயாத அரையுடன் நின்று கொண்டிருக்கிருர் ! -: "இவர் ஞானசம்பந்தராயிற்றே! இவர் இங்கே எப்படி வந்தார்?' என்று கேட்டேன். 'கலாப காலத்தில் இப்படி மாறிவிட்டது” என்று விடை வந்தது. இன்னும் அவரைச் சுந்தர மூர்த்தியென்றே நினைத்துப் பூசித்து வருகிருர்கள்! ஊரின் பெயர் திருவெண்ணெய் நல்லூர். அம் பிகை வெண்ணெயாலே கோட்டை கட்டி அத னுள்ளே பஞ்சாக்கினி மத்தியிலிருந்து தவம் செய் தாளாம். அதனுல் அப்பெயர் வந்ததாம். கோயி லுக்கு அருட்டுறை என்று தனிப் பெயர் இருக்கிறது. கிருபாபுரி என்று வட மொழியில் வழங்குகிருர்கள். இறைவனுக்கு அருளாளன் என்று பழம் பெயர். கிருபாபுரீசுவரர் என்றும் வேணுபுரீசர் என்றும் வேறு பெயர்கள் உண்டு. இந்தத் தலத்தின் விருட்சம் மூங் கில்; அதல்ை இது வேணுபுரி ஆயிற்று. சுந்தரர் காலத்துக்குப் பின் தடுத்தாட் கொண்டார், ஆட் கொண்ட தேவர், பித்தனென்று பாடச் சொன்னர் என்ற திருநாமங்கள் உண்டாயின. கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி உடையது. உள்ளே புகுந்தவுடன் வடக்கு மூலையில் நூற்றுக்கால்