பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 வாருங்கள் பார்க்கலாம் வந்து யாகம் புரிந்து திருமால் அருள் பெற்ருராம். அதனுல் திருவோண நல்லூர் என்ற பெயர் வந்த தாம். நீ வைகுண்டநாதப் பெருமாள் கோயில் சந்நிதியில் பெரிய திருவடியாகிய கருடன் நிற்க வேண்டிய இடத்தில் சாண்டில்ய மகரிஷியே நிற். கிருர். சிவபெருமான் திருக்கோயிலுக்கு முன் சுந்தரர் நிற்கிறபோது இங்கே ஒரு பக்தர் நிற்க வேண்டாமா? சுந்தரமூர்த்தி நாயனுர், "பெண்ணேத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள், அத்தா? என்று பாடியிருக்கிருர். இத்தலம் பெண்ணேயாற்றின் தென் கரையிலே இருக்கிறதென்று அந்தப் பாட்டுச் சொல்கிறது. இப்போது பெண்ணேயாற்றுக்கும் இந்த ஊருக்கும் மூன்று மைல் தூரம் இருக்கிறது. ஊருக்கு வடக்கே கால் மைல் துரத்தில் மலட்டாறு என்ற ஆறு இருக்கிறது. அதுதான் பழைய பெண்ணே. புதிய பெண்ணே தன்வழி மாறி இன்னும் வடக்கே மூன்று மைல் தூரத்தில் விலகி ஒடுகிறது. மலட்டாறு என்ற பேர் மலாட்டாறு என்று இருக்க வேண்டும். மலாடு என்பது இப்பகுதியுள்ள நாட்டுக்குப் பழம்பேர்; மலே யமான் நாடு என்பது அவ்வாறு மருவி வழங்கியது. மலாடுஎன்ற நாட்டில் ஒடுவதால் மலாட்டாறு என்று பெயர் பெற்று, இப்போது மலட்டாறு ஆகிவிட்டது! தண்ணிர் இல்லாத ஆற்றுக்கு அப்படிப் பேர் சொல் வதும் பொருத்தந்தானே ? திருநாவலூர்ப் புராணம் இயற்றிய இராசப்ப நாவலர் இந்தத் தலத்துக்கு ஒரு கலம்பகம் இயற்றி யிருக்கிருர், முன்பு புத்துராக இருந்தது சுந்தரர் மணம் செய்ய வந்தமையால் மணம் வந்த புத்துரர் ஆகி,