பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் கல்லூர்ப் பித்தன் 149 பிறகு மணம் தவிர்ந்தமையால் மணம் தவிர்ந்த புத்தூர் என்று இப்போது வழங்குகிறது. தடுத்தாட் கொண்ட ஊர் என்ற ஊர் இதனருகே இருக்கிறது. பங்குனி மாதம் திருவெண்ணெய் நல்லூரில் பிரம் மோற்சவம் நடைபெறுகிறது. - திருவெண்ணெய் நல்லூர் ரோடு என்ற இடத் தில் இறங்கி இத் தலத்துக்குச் செல்ல வேண்டும். விழுப்புரத்திலிருந்து பஸ்ஸில் ஏறியும் செல்லலாம். திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருக் கும் பெருமான் சட்டம் வல்ல நாயகன் : சுந்தரரை விடேன், தொடேன் என்று தொடர்ந்து வழக்கிட்டு ஆட்கொண்டான். உருகும் வெண்ணெயை உருகா மல் வைத்துக் கோட்டையாகக்கட்டினுள் அம்பிகை; உருகாத மனத்தை உருகச் செய்து இடமாகக் கொண்டான் அப்பன். அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் ஆள தாகனன்று ஆவணங் காட்டி கின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த நித்திலத்திரள் என்று சுந்தரர் இறைவனேப் பாடுகிறர். அவர் பாடிய பித்தன் இன்றும் வெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருக்கிருன். அந்தப் பித்தனுக்காகப் பித்துப் பிடிக்கும் தொண்டரைத்தான் காணவில்லை.