பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானக் குழந்தை பிறந்த ஊர் 7. எவ்வளவோ மகிமை இருக்கிறது. இந்தத் தலத்துக் குரிய புராணம் 1550 பாடல்களால் தலச்செய்திகளை விரித்துச் சொல்கிறது. எல்லாப் பெருமைகளையும் விடத் தலைமையாக இருப்பது திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர் அவதாரம் செய்த சிறப்பு. கோயிலைச் சார்ந்த அக்கிரகாரம் ஒன்றில் திருஞானசம்பந்தர் பிறந்த்ார். இப்போது கோயில் மதில் பெரிதாக இருக்கிறது. அந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய கட்டிடங்கள் இல்லை. ஞான சம்பந்தப் பிள்ளையார் உதயம் செய்த வீதிக்குள் போனேன். முன்பு அதற்கு இரட்டைத்தெரு என்று பெயர் வழங்கியதாம், இப்போது திருஞானசம்பந்தர் தெரு என்று பேர் வைத்திருக்கிறர்கள். சேக்கிழார் காட்டுகிற தெருவுக்கும் இதற்கும் எத்தனையோ வேறுபாடு. அன்று இருந்த கட்டிடங்களே இப்போது, பார்க்க முடியுமா? ஒட்டு வில்லை வீடுகளும் மாடி வீடுகளும் கலந்து இப்போது காட்சி அளிக்கின்றன. வேத ஒலியும் வேள்விப் புகையும் நிரம்பிய காலம் அது. எங்கே பார்த்தாலும் வேதம் ஒதும் கிடைகள் இருந்ததாகச் சேக்கிழார் பாடுகிருர். -- “ஞானசம்பந்தர் பிறந்த விடு எங்கே?' என்று கேட்டுக்கொண்டே போனேன். வீதியில் உள்ளவர் கள் ஒரு வீட்டைக் காட்டினர்கள். சாமானியமான ஒட்டு வில்லே வீடு அது. வாசலில் திண்ணே. அவர் பிறந்த வீடு மறைந்து அந்த இடத்தில் எத்தனையோ வீடுகள் எழுந்து மறைந்திருக்க வேண்டும். இப்போது இந்த ஒட்டு வில்லே வீடு நிற்கிறது. வீட்டுக்குள்ளே சென்று பார்த்தேன். இந்த இடத்தில்தான் ஞான சம்பந்தர் பிறந்தார்’ என்று இடைகழிக்கு அருகில்