பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வாருங்கள் பார்க்கலாம் வந்தது. கழுமலம் என்பதே தற்குரிய பழைய பெயராதலால் திருஞான சம்பந்தர் தம் தேவாரத்தில் கழுமல முதுபதி என்று பாடியிருக்கிருர். ஞானசம்பந்தர் வரலாற்றைச் சொல்லவந்த சேக்கிழார் முதல் முதலில் கழுமலம் என்றே இந்நகரத்தை அறிமுகப்படுத்துகிருர், சென்னிவளர் மதிஅணிந்த சிலம்பணிசே வடியார்தம் மன்னியசை வத்துறையின் வழிவந்த குடிவளவர் பொன்னிவளங் தருநாடு பொலிவெய்த நிலவியதால் கன்னிமதில் மருங்குமுகில் நெருங்குகழு மலமூதூர்." “கழுமல முதுபதி” என்று சம்பந்தர் கூறுவதைப் பின்பற்றிச் சேக்கிழார் இதைக் கழுமல மூதூர் என்று சொல்வது கவனிப்பதற்குரியது. - பெயர் ஆராய்ச்சி போதும். இனி ஊருக்குள்ளே போவோம். ஞானக் குழந்தை திருவவதாரம் செய்த ஊர் என்று நினைத்தாலே பக்தர்களுக்கு உள்ளம் பூரிக்கும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்த ஊருக்கு வரும்போது, ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்த இந்தத் தலத்தை நான் மிதிக்க மாட்டேன்' என்று ஊரை வலம் வந்து வெளியே நின்று வணங்கி ரைாம். வெளியிலிருந்து பார்த்தாலே கோயில் கோபுரம் உயர்ந்துதோற்றம் அளிக்கும். தமிழ்நாட்டுக் கோயில்களின் தனிச்சிறப்பே அதுதானே? சீகாழிக்கு - :Tவளிவ சோழர். பென்னிசெவி இன்னி மதில்-என்றும் அழி யாமல் உள்ள ம் தில், #. r