பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானக் குழந்தை பிறந்த ஊர் 5 சீகாழி-ஏன் இந்தப் பெயர் வந்தது? இந்தத் தலத்தில் பத்திரகாளி சிவபெருமானைப் பூசை பண்ணி வரம் பெற்ருளாம். அதனுல் ரீ காளிபுரம் என்ற பெயர் இதற்கு ஏற்பட்டதாம். ரீ காளிபுரம் யூ காளியாகி அதில் உள்ள நீ என்ற எழுத்தும் ளி என்ற எழுத்தும் தமிழாக மாறிச் சீகாழியென்று ஆகி விட்டனவாம். அழகொழுகும் பழகு தமிழில் காளி காழியானது ஆச்சரியம் அன்று. இன்று சீகாழியென்று வழங்கிலுைம் இந்த ஊர் காளி பூசிப்பதற்கு முன்பும் இருந்ததுதானே ? அப்போது இதற்கு என்ன பெயர் வழங்கியது என்று ஆராய்ச்சி செய்தேன். இதன் பழைய பெயர் கழுமலம் என்று தெரிந்தது. காவிரிப்பூம்பட்டினத் துக்கும் இதற்கும் இப்போது ஏறக்குறையப் பன்னிரண்டு மைல் தூரம் இருக்கும். காவிரிப்பூம் பட்டினம் சோழர்களுடைய இராசதானி நகரமாக இருந்தது. அந்தப் பட்டினத்தின் எல்லே கிட்டத் தட்டச் சீகாழி வரையில் எட்டியிருந்தது. அக்காலத் தில் இதற்குக் கழுமலம் என்றபெயர் வழங்கி வந்தது. கரிகால் வளவனைத் தன் தலையிலே வைத்துக் கருவூரிலே யிருந்து தூக்கிக் கொண்டு வந்தது, ஒரு யானே. சோழ அரசனது பட்டத்து யானே அது. அதை இந்தக் கழுமலத்தில்தான் கட்டி வைத்திருந் தார்களாம். இந்த ஊர் கழுமல நாடு என்ற நாட்டின் தலைநகரம். ராஜாதிராஜ வளநாட்டுத் திருக்கழுமல வளநாட்டில் இது இருந்ததாகக் கல்வெட்டுச் சொல்லுகின்றது. கழுமலத்தைத் தலைநகராகக் கொண்டதல்ை கழுமல வளநாடு என்ற பெயர்