பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவையார் ஊர் 153 சிறப்பித்து, அங்கே உள்ள திருக்கூட்டச் சிறப்பைப் பாடினர். அந்த மாதவர் கூட்டத்தை அந்தமில் புகழ் ஆலாலசுந்தரர், சுந்தரத் திருத்தொண்டத் தொகை யால் புகழ்ந்து பாடினர். அந்த வரலாற்றை உரைக்கத் தொடங்கி, சுந்தரர் பிறப்பையும், திருமண முயற்சியையும், இறைவன் தடுத்தாட் கொண்டதை யும் சொல்லி, பிறகு அவர் தலயாத்திரை தொடங்கித் திருவாரூருக்கு வந்து பரவையாரைத் திருமணம் செய்துகொண்டு அவ்வூரிலே வாழும்போது ஒரு நாள் திருக்கூட்டத்தைத்தொழுது, திருத்தொண்டத் தொகையைப் பாடியதையும் சொல்லி, தம்பிரான் தோழராகிய அவர் மொழிந்த தமிழ் முறையே, எம்பி ரான் தமர்கள் திருத்தொண்டை ஏத்தலாம்' என்று முடிவுபண்ணினர். அப்படியே பாடி முடித்தார். இப்போது பெரிய புராணக் காவியத்துக்கு நாட்டுச் சிறப்பும் நகரச் சிறப்பும் அமைந்துவிட்டன. சோழ நாட்டின் பெருமையும் திருவாரூர்ச் சிறப்பும் பெரிய புராணத்தின் முகப்பிலே முன் வாயிற் பூஞ் சோலையாக விளங்குகின்றன. - சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரிலே தங்கும் படி நேர்ந்ததற்குக் காரணம், அவரும் பரவையாரும் இறைவனுடைய திருவருளே துணேயாகத் திருமணம் புரிந்து கொண்டதுதான். திருவாரூர் பரவையார் ஊர் ஆதலின், சுந்தரருக்கும் அதுவே வாழிட மாயிற்று. 2 'திருவாரூர்த் தேரழகு!’ என்று பழமொழி சொல்வார்கள். தேர் மட்டுமா அழகு? அதில் உள்ள கமலாலயம் என்ற பிரம்மாண்டமான குளம் எவ்வளவு