பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வாருங்கள் பார்க்கலாம் அழகு! திருக்கோயில்தான் சாமானியமானதா? கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று சொல்வார்கள். கிழக்குச் சந்நிதியில் கோபுரத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். எதிரே வீதியின் ஒரு பக்கம் இரண்டு கிளேகளோடு ஒரு தென்னமரம் நின்றது. அதைப் பார்த்தவுடன் எனக்குச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் கதை நினைவுக்கு வந்தது. பெற்ற தகப்பணுரும் வளர்த்த அரசரும்பெண்ணேக்கொடுக்க எண்ணிய சடங்கவி சிவாசாரியாரும் எத்தனை ஆசை யாகச் சுந்தரருக்குக் கல்யாணம் பண்ணிவைக்க முயன்ருர்கள்! அந்தக் கல்யாணத்தை வெண்ணெய் நல்லுர்ப் பித்தன் வந்து தடுத்தான். சுந்தரர் தனி மரமாக நின்ருர். இந்தத் திருவாரூருக்கு வந்தார். பரவையென்னும் அருள் மடந்தையோடு ஒன்றினர். கிளேக்காத தென்னயரம் கிளேத்ததுபோல, அவர்கள் இருவரும் இரண்டு கிளேகளாக இறைவனருளால் தாங்கப் பெற்று விளங்கினர். "பரவையார் வாழ்ந்த இடம் இன்னதென்று தெரிந்து கொள்ள ஏதாவது அடையாளம் இருக் கிறதா ? என்று விசாரித்தேன். "அது இப்போது கோயிலாக இருக்கிறது. பரவை நாச்சியார் கோயில் என்று வழங்குகிறது” என்று சொன்னர்கள். தெற்குச் சந்நிதியில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது அக்கோயில். கோயிலுக்குமுன் போனபோது எம்பிரான் பரவை நாச்சியாருடைய ஊடலைத் தீர்ப்பதற்காக இருமுறை அந்தத் திரு மாளிகை வந்தார் என்ற கதை நினைவுக்கு வந்தது. "இந்தத் திருவீதிக்குச் செந்தாமரை நாறிய திருவீதி