பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறை செல்வத் திருவாரூர் 165 கொண்டிருக்கிருள். இந்தச் சந்நிதியின் வெளியே இந்தத் தலத்தோடு தொடர்புடைய ஒவியங்களைத் தீட்டியிருக்கிருர்கள். கர்ப்பக் கிருகத்தினுள்ளே சென்று மூர்த்திகளின் வடிவத்தைத் தெளிவாகப் பார்க்க முடியாவிட்டால், இந்த ஒவியங்களைக் கொண்டு அம் மூர்த்திகளின் கோலத்தைத் தெரிந்து கொள்ளலாம். தியாகேசர், நீலோற்பலாம்பிகை, கமலாம்பிகை முதலியவர்களின் ஓவியங்களை இங்கே காணலாம். கமலாம்பிகை பிராகாரத்தில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிருள். எம்பெருமானே நோக்கித் தவம் புரியும் கோலத்தில் அந்த அம்பிகை காட்சியளிக்கிருள். பாசம், ருத்திராட்சமாலை, அபய முத்திரை, மலரம்புகள் இவற்றைத் தாங்கிய திருக் கரங்களோடு, ஒரு காலின்மேல் மற்ருென்றைப் போட்டு மடக்கிய கோலத்தில் வீற்றிருக்கிருள். சக்திக்குரிய பீடங்களில் இந்தச் சந்நிதியும் ஒன்று. திருக்கோயிலின் உள்ளே சுந்தரமூர்த்தி நாயனு ரும், சேரமான் பெருமாள் நாயனரும் உற்சவமூர்த்தி களாக எழுந்தருளியிருக்கும் சந்நிதி ஒன்று இருக் கிறது. - இக்கோயிலில் பஞ்சமுக வாத்தியம் என்றும் பஞ்சானன முரசு என்றும் வழங்கும் தோற்கருவி ஒன்று இருக்கிறது. பெரிய குடத்தில் நடுவில் ஒரு முகமும் அதைச் சுற்றி நான்கு முகமும் உள்ள வாத் தியம் அது. அந்த ஐந்து முகங்களிலும் தட்டி வாசிக் கலாம். அதைப் பரம்பரை பரம்பரையாக வாசித்து வருகிறவர்கள் இருக்கிருர்கள். -