பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வாருங்கள் பார்க்கலாம் ராஜப் பெருமானும் தனித்தனிச் சந்நிதிகளே உடைய வர்களாய் விளங்குகிருர்கள். தியாகேசப் பெருமானுடைய கோயிலுக்குள் முசு குந்தன் பெற்றுவந்த சிவலிங்கப் பெருமானத் தனியே தங்கப்பேழையில் வைத்துப் பூசை செய்கிருர்கள் : அவரை விடங்கர் என்று சொல்லுவார்கள். டங்கம் என்பது உளி உளிபடாத சுயம்புமூர்த்தி என்பது விடங்கர் என்பதன் பொருள். தியாகேசப்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்துக்குப்பின்னல் ஒருசுவர் இருக்கிறது. அதற்கு அப்பால் சில அடிகளுக்குப் பிறகு கோயிலின் சுவர் இருக்கிறது. இந்த இரண்டு சுவர் களுக்கும் இடையே என்ன இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. ஆனல் அந்த இரகசிய இடத்தி லிருந்து அபிஷேக நீர் வெளி வரும்படியாகக் கோமுகி ஒன்று வெளியே இருக்கிறது. முன்காலத்தில் அவ் விடத்தில் விடங்கப் பெருமானகிய லிங்கத்தை வைத்துப் பூஜை செய்திருப்பார்கள் போலும். தியாகேசர் எழுந்தருளியுள்ள இடத்துக்குத் தேவ சபை என்று பேர். அங்கே சந்நிதியில் நந்தி நின்ற கோலத்தில் இருக்கிறது. தியாகப் பெருமான் திருமாலின் இதய பீடத்தில் எழுந்தருளியதைக் காட்டும் ஒவியம் ஒன்றை அப் பெருமான் கோயிற் சுவரில் அமைத்திருக்கிருர்கள். அல்லியம் பூங்கோதையாகிய நீலோற்பலாம் பிகையின் திருவுருவம் மிக அழகியது. அம்பிகையின் அருகில் இடப்புறத்தில் ஒரு சக்தி முருகனத் தன் தோளில் வைத்துக்கொண்டு நிற்கிருள். அம்பிகை தன் இடக்கரத்தால் முருகன் கை விரலேப் பிடித்துக்