பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறை செல்வத் திருவாரூர் 163 திருமாலினுடைய உபாசன மூர்த்தியாக இருந்த வர் தியாகராஜர். திருமால் அவரை எப்போதும் தம்முடைய இதய ஸ்தானத்தில் வைத்துப் பூசித்தா ராம். அவர் படுத்திருக்கும்போது இப்பெருமானே. இதய பீடத்தில் வைத்திருக்கையில், மூச்சு விடும் போது திருமார்பு மேலேறிக் கீழ் இறங்கியது. உச்சு வாச நிச்சுவாசங்களால் உண்டான ஏற்ற இறக்க அசைவு காரணமாகத் தியாகப் பெருமான் ஆடினர். அமர்ந்திருந்தபடியே ஆடுவதால் அவரை இருந்தா டழகர் என்று சொல்வார்கள். சுவாசத்தை இழுத்துப் பின்பு விடும் அளவில் ஜபிக்கின்ற மந்திரத்திற்கு அஜயா மந்திரம் என்று பெயர். நாவினுல் ஜபிக்கா தது ஆதலின் அம்மந்திரத்திற்கு அப்பெயர் வந்தது. திருமால் அதனை மூச்சுக் காற்றேடு தியானிக்கையில் தியாகேசர் நடனம் புரிந்ததனுல் அந்த நடனத்துக்கு அஜபா நடனம் என்ற பெயர் உண்டாயிற்று இருந் தாடழகராகிய தியாகராஜருடைய அஜபா நடனத்தை இன்றும் மிகச் சிறப்பாக விழாக்காலத்தில் தரிசித்து இன்புறலாம். திருமால் தியாகராஜரை இந் தி ர னு க்கு க் கொடுக்க, இந்திரன் தனக்குத் துணை நின்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு அம் மூர்த்தியை அளித்தான். அம் மன்னன் தருவாரூரில் அப் பெருமானே நிறுவி வழி பட்டான். திருவாரூர்க் கோயிலில் வெளிப் பிராகாரம் ஒன்றும், உள் பிராகாரம் ஒன்றும், அதற்குள் திருக். கோயிலும் அமைந்திருக்கின்றன. திருக்கோயிலில் வன்மீகநாதராகிய புற்றிடங்கொண்டாரும், நீலோத் பலாம்பிகையாகிய அல்லியங்கோதையும், தியாக