பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 வாருங்கள் பார்க்கலாம் எல்லா இடங்களுக்கும் ராஜாவாக இருந்து அரு இராஜணயை நடத்துகிருன். காஞ்சீபுரத்தில் வரத. ராஜன் என்றும், நீரங்கத்தில்.ரங்கராஜன் என்றும், திருமாலிருஞ் சோலை மலேயில் சுந்தரராஜன் என்றும், சிதம்பரத்தில் நடராஜன் என்றும், திருவா ரூரில் தியாகராஜன் என்றும் அந்த ராஜா விலாசத்தை மாற்றிக் கொண்டு அருளாட்சியை நடத்துகிருன், திருவாரூரில் உள்ள மூலமூர்த்திக்கு வன்மீக நாதர் என்று பெயர். ஆனல் அங்கே எல்லாச் சிறப். பும் பெறுகிற மூர்த்தி தியாகராஜப் பெருமானே. மற்றத். தலங்களில் எல்லாம் நாயகர் என்றும், சோமாஸ் கந்தர் என்றும் வழங்கும் உற்சவ மூர்த்தியே இங்கே தியாகராஜராக எழுந்தருளியிருக்கிருர், பஞ்சபூத ஸ்தலங்களில் திருவாரூரைப் பிருதிவி ஸ்தலம் என்பார்கள். அதாவது மண்ணுடன் தொடர் புடைய தலம் என்று பொருள். இங்குள்ள மூல மூர்த்தி புற்றிலிருந்து எழுந்ததனுல் புற்றிடங் கொண் ட்ார் என்று தமிழிலும், வன்மீகநாதர் என்று வட மொழியிலும் திருநாமம் பூண்டார். திரு ஆரூர் என்ற பெயரில் உள்ள ஆர் என்பதற்கே பூமி என்று: பொருள் என மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் சொல்வார்கள். திருவாரூரில் சிவபெருமான் சோழ சக்கரவர்த்தி: யாக எழுந்தருளி ஆட்சி புரித்தார் என்று புராணம் சொல்கிறது. மதுரையிலே பாண்டியனுக இருந்து ஆண்ட பெருமான் இங்கே சோழனுக அரசாண்டது. ...' பொருத்தந்தானே? மதுரையில் இறைவன் அறுபத்து நான்கு விளையாடல்களைப் புரிந்தான். இங்கேயோ முந்நூற்றறுபது விகளயாடல்களேச் செய்தானும்.