பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறை செல்வத் திருவாருர் "மகாராஜ ராஜ ரீ.........அவர்களுக்கு அநேக தமஸ்காரம்......... ’ என்று எழுதுவது தமிழ்நாட்டுப் பழைய வழக்கம். யாராக இருந்தாலும் மகாராஜா வாகச் சொன்னல் அவர்களுக்கு மனம் குளிர்ந்து போகிறது. வடக்கே கூடப் பேசும்போது ஒருவரை ஒருவர் மரியாதையாக மகராஜ் என்று சொல்லிக் கொள்கிருர்கள், - - ராஜசக்களெல்லாம் தங்கள் சம்ஸ்தானங்களை இழந்து குடி மக்களோடு குடி மக்களாய் மாறிக் கொண்டிருக்கிற காலம் இது. அதே சமயத்தில் குடி மக்கள் யாவரும் ராஜாக்களாகி, "எல்லாரும் இந் நாட்டு மன்னர்’ என்று சொல்லும் ஜனநாயக காலம் இது. இந்த அரசியல் நிலையை நினக்காமலே நாம் ‘மகாராஜ ராஜ ரீ' போட்டு வருகிருேம். ஆலுைம் மனிதர்களாகிய மகாராஜாக்களுக்கு மேலே ஒரு சக்கரவர்த்தி இருக்கிருன். எத்தனை ராஜாக்கள் போனலும் அந்த ராஜா நிரந்தரமாக இருப்பான். அவனுக்கும் நமக்கும் உள்ள உறவு முறை என்றும் மாருது. "பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்' என்று முழங்கும் பாரதி, தொடர்ந்து அந்த ராஜாதி ராஜனுக்கு அடிமை செய்வதை விரும்பிப் பாடுகிருt; பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பாடியிருக்கிருர். அந்தப் பரிபூரணனே உண்மையான ராஜா. எல்லாக் காலங்களுக்கும் வா. பா. - 11.