பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாருங்கள் பார்க்கலாம் 160 அடைந்த துயரத்தை நான் அடைவதே முறை" என்று தன் மகனைத் தேர்க்காலில் இட்டு ஊர்ந்தான். பிறகு இறைவன் திருவருளால் பசுவின் கன்றும் அரசன் கன்றும் உயிர்த்தெழுந்த அற்புதத்தைக் கதை சொல்கிறது, மனுச்சோழன் கதையைச் சொற்சிற்பியாகிய சேக்கிழார் பெரிய புராணத்தில் காட்டுகிருர். அந்தக் கதையைக் கற்சிற்பிகளும் காட்டி யிருக்கின்றனர். திருவாரூரில் மனுச் சோழன் ஊர்ந்த தேரும், அதன் சக்கரத்தடியில் அவன் மகனும் இருக்கும் அழகிய சிற்பம் ஒன்று உண்டு. அதனருகில் கன்றை இழந்த பசு, இறந்த அக் கன்றின் முன் சோகமே உருவாக நிற்கும் சிலையுருவைக் காணலாம். மிகவும் புனித மாகக் காப்பாற்ற வேண்டிய இச் சிற்பங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் நிலையில் வைத் திருக்கிறர்கள். சின்னப் பள்ளிக்கூடம் ஒன்று அவ் விடத்தில் நடைபெறுகிறது. மனித சாதியே ஜிவ காருணியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய கலைக் கூடமாக அது இருக்கவேண்டும். ஆணுல் அந்தச் சிற்பத்தின் அருகிலே படம், மடம், படபட, டபடப என்ற பாடங்களைப் படிக்கும் பிள்ளைகளேத்தான் இப் போது காண்கிருேம். சேக்கிழார் திருவாரூர் நகரத் தின் சிறப்புக்கு அடையாளமாகச் சொல்லும் வரலாற்றுச் சிற்பம், சிறைப்பட்டு, கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. இன்றைய நகரச்சிறப்பு அதுதானே?* AS AMAAAS S ASAAAAMAAAS AAASASASeeS SSAAAS .مہمہ پہ-سی مم-جیحیم..حسبیحیرہ حی "இப்போது இந்த இடத்தைப் பாதுகாப்பாக வைத்திருக் கிருர்கள்,