பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறை செல்வத் திருவாரூர் 169* விறன்மிண்ட நாயனர் என்ற இவர் திருநாமத் தான் எனக்குத் தெரியும்' என்றேன்; 'அவர் அடியார்களே மதியாதவரிடம் விறலுடன் மிண்டு. செய்ததனுல் அந்தப் பேர் அவருக்குப் பின்னல் வந்திருக்க வேண்டும்” என்றும் சொன்னேன். "அவருடைய முரட்டுத்தனத்தை விளக்குவது. போல அவர் பெயரைச் சிதைத்து வழங்குகிருர்கள், வெறி முண்ட நாயனுர் என்று சொல்கிருர்கள்!” என்ருர் அன்பர். பிறகு கதையைச் சொன்னர். அடியாரை மதியாத சுந்தரரை ஆண்டு கொண் 'டவர் ஆரூர்ப் பெருமான் என்ற எண்ணத்தால்: ஆரூரை மிதிப்பதில்லை என்ற விரதம் பூண்டார் விறன் மிண்டர். அவர் மலேநாட்டில் உள்ள செங்குன்றுாரில் பிறந்தவர்; பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு வந்தவர், இவ்வூருக்கு வடக்கே இரண்டு மைல் தூரத்தில் தங்கியிருந்தார். யாரேனும் திருவாரூரி லிருந்து வந்தவர் என்று தெரிந்தால் உடனே அவர் காலை வெட்டிவிடுவாராம். இந்த வெறியைப் போக்க இறைவன் எண்ணிஞன். ஓர் அடியார் திரு. வுருவத்தை எடுத்துக்கொண்டு விறன் மிண்டரிடம் போனன். வழக்கம்போல் விறன்மிண்டர் அடியாரை,. 'எந்த ஊர்?’ என்று கேட்டாராம். அடியார்,. "திருவாரூர்’ என்று சொன்னதுதான் தாமதம், அவர் காலே வெட்டக் கோடரியை எடுத்தார் விறன் மிண்டர். அடியார் ஓட்டமெடுக்கத் தொடங்கினர். நாயனர் அவரைத் தொடர்ந்து ஓடினர். பிடிக்க முடியவில்லை. அவர் ஒட இவர் ஓடக் கடைசியில் அடியார் திருவாரூர் எல்லையை மிதித்து விட்டார். அவரைத் தொடர்ந்து வந்த நாயனரும் எல்லேயை