பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 170 வாருங்கள் பர்க்கலாம் மிதித்தாராம். அப்போதுசட்டென்று இறைவன், வந் தோம் இப்பாலே" என்ருளும். நாம் ஆரூர் எல்லேக் குள்வந்துவிட்டோம். உம்முடைய விரதம் போயிற்று' என்ற குறிப்போடு அப்படிச் சொல்லவே, நாயனர் பிரமிப்படைந்து நின்ருர். இறைவன் தன் திருவுரு வத்தைக் காட்டி அவருக்கு அருள் செய்தானும். இப்போது திருவாரூருக்கு அருகில் வண்டாம் பாலை என்று வழங்கும் ஊர் இருக்கிறது. 'வந்தோம் இப்பாலே என்று இறைவன் சொன்ன இடம் அது வென்றும், அத்தொடரே வண்டாம் பாலே என்று மருவி வழங்குகிற தென்றும் சொல்கிருர்கள். இந்தக் கதையைக் கேட்டபோது எனக்கு வ. வே. ஸ் ஐயரவர்கள் வாழ்க்கை நினைவுக்கு வந்தது. ஆங்கிலப் போலீசார் துரத்த ஓடிய ஐயர் புதுச்சேரியில் பிரெஞ்சு எல்லேக்குள் புகுந்தவுடன் தைரியம் பெற்று, 'இது பிரெஞ்சு எல்லே' என்று எதிர்த்து நின்ருராம். அடியாராக வந்த இறைவன், வெறி மூண்ட விறன்மிண்டரிடம் சொன்ன, 'வந்தோம் இப்பாலே’ என்றது போலவே இருக் கிறது அல்லவா ? விறன்மிண்ட நாயனர் கையில் கோடரியோடு கோபுர இடைகழியிலே அமர்ந்திருக் கிருர். - திருக்கோயிலுக்கு மேற்கே கமலாலயம் என்ற பெரிய திருக்குளம் இருக்கிறது. இது ஐந்து வேலிப் வரப்புள்ளது: 64 கட்டங்களே உடையது. தேவ தீர்த்தம் என்றும் ஒரு பெயர் இதற்கு உண்டு. இதன் வடகிழக்கு மூலையில்தான் மாற்றுரைத்த விநாயகர் கோயில் இருக்கிறது. -