பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறை செல்வத் திருவாரூர் pof இதன் நடுவில் ஒரு திட்டும் அதில் ஓர் அழகிய கோயிலும் இருக்கின்றன. ஒடத்தில் ஏறி அக்கோயி லுக்குச்செல்லலாம். பூசைமுதலியவை அப்படித்தான் நடைபெறுகின்றன. அந்தக் கோயிலே நடுவ நாயனர் கோயில் என்றும் நடுவணுர் கோயில் என்றும் நடு விலான் கோயில் என்றும் வழங்குகிருர்கள். அங்கே எழுந்தருளியிருக்கும் பெருமான்"நாகநாதர்; அம்பிகை :யோகாம்பிகை, கமலாலயத்தின் மேற்குக் கரையில் ஒரு கோயில் இருக்கிறது. தீர்த்தத்தினுள்ளே சிறிது இக்கோயில் சென்றிருக்கிறது. இது யக்ளுேசுவரர் கோயில். கமலாலயத்தின் மேல் கரையில் நின்று பார்த்தால் அந்தக் குளமும் நடுக்கோயிலும் எதிரே தோன்றும் திருக் கோயிற் கோபுரங்களும் கண்ணையும் கருத்தை :யும் கவரும் அழகிய காட்சியை அளிக்கும். இவ்வூரில் கிழக்கு வீதியில் துர்வாச நாயனர் கோயில் என்ற பெயரோடு ஓர் ஆலயம் இருக்கிறது. துர்வாசர் பூஜை செய்த கோயில் அது. அதைப் பரவையுண் மண்டளி என்று தேவாரமும் பெரிய புராணமும் கூறுகின்றன. பரவை என்பது கடல். மண்தளி என்ருல் மண் கோயில் என்று பொருள். ஏதோ ஒரு காலத்தில் கடலின் நடுவிலே திட்டும் அதில் சிவலிங்கப்பிரானும் இருக்க, அப் பெருமானே இங்கே கொண்டு வந்து யாரேனும் நிறுவியிருக்க லாம். அல்லது கடல் போல எங்கும் நீர் பரந்திருந்த போது அந்த நீர்ப்பரப்பில் மண்திட்டில் இருந்த கடவு ளாகவும் இருக்கலாம். வருணன் ஒருமுறை சினம் மூண்டு இவ்வூரை அழிக்கக் கடலே ஏவிளுைம். கடல் பொங்கி வரவே இக்கோயிலில் உள்ள சிவபெருமான்