பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானக் குழந்தை பிறந்த ஊர் . 9 அந்தத் தெருவோடே போனேன். தெருவின் கோடியில் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் உள்ள சுவாமியை ஞானசம்பந்தருடைய த ந் ைத யார் பூசை செய்தாராம். சுவாமிக்குச் சோளிசுவரர் என்று திருநாமம். ரீ காளி என்ற பெயரில் ளகரம் ழகரம் ஆகிவிட்டது. இங்கே அதற்கு மாருகச் சோழிசுவரர் என்றது சோளிசுவரர் ஆகி விட்டது. அம்பிகைக்குச் சூளிகாம்பிகை என்று திரு நாமம், சின்னஞ்சிறிய கோயில் அது. அந்தத் திரு வீதியின் ஒரு கோடியில் இந்தக் கோயிலும், மற்ருெரு கோடியில் பெரிய கோயில் திருமதிலும் இருக்கின்றன. 2 சிவபாத இருதயர் வழக்கம்போல் அன்றும் காலையில் நீராடச் சென்ருர், திருக்கோயிலுக்குள் இருக்கும் பிரம தீர்த்தத்தில் நீராடுவது அவர் வழக்கம். "நானும் வருகிறேன்’ என்று குழந்தை அழுதான். மூன்று வயசுக் குழந்தை, இன்னும் ஆடை கட்டாத பருவம், தம்மைப் பி ன் தெ டர் ந் து வரும் குழந்தையை மிரட்டினர் தகப்பனர். குழந்தை அன்று உலகத்துக்கே தாயும் தந்தையுமாக இருப்பவர்களைப் பார்க்க வேண்டிய நாள். குழந்தைக்கு அது அப் போது தெரியாவிட்டலும் உலக மாதாவுக்கும் பிதாவுக்கும் அது தெரியும். அவர்கள் இந்தக் குழந்தைக்காகக் காத்திருத்தார்கள். தகப்பனர் மிரட்டியும் அந்தக் குழந்தை பிடிவாதம் செய்தான். கிண்கிணி அணிந்திருந்த காலைத் தரையிலே தூக்கித் தூக்கி வைத்து அழுதான். தகப்பனர். “சரி, வா' என்று சொல்லி அழைத்துச் சென்ருர்,