பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வாருங்கள் பார்க்கலாம் பிரமன் பூசித்த இந்தத் தலத்துக்குப் பிரமபுரம் என்பது ஒரு பெயர், அவன் உண்டாக்கியது பிரம தீர்த்தம் என்று புராணம் சொல்கிறது. அங்கே சிவ பாத இருதயர் நீராடப் புகுந்தார். குழந்தை கரையிலே நின்று கொண்டிருந்தான். தகப்பனர் நீராடிவிட்டு அகமருஷணம் என்ற மந்திரத்தை ஜபித்து நீரில் மூழ் கினர். சிறிது நேரம் அவர் மூழ்கியிருந்தபோது குழந்தை பார்த்தான். தந்தையாரைக் காணவில்லே. சுற்றும்முற்றும் பார்த்தான். அப்பாவைக் காண வில்லை; அழத் தொடங்கினன். அருகிலே உள்ள கோயிலில் உயர்ந்து தோன்றும் திருத்தோணியைப் பார்த்து அழலான்ை.கண்ணில் நீர் ததும்பக் கையால் கண்ணக் கசக்கி வாயிதழ் துடிக்க அந்தத் திருத் தோணிச் சிகரத்தைப் பார்த்து, அம்மா! அப்பா!' என்று கூறி அழுதான். - கண்மலர்கள் நீர்ததும்பக் கைம்மலர்க ளாற்பிசைந்து, வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடைதுடிப்ப எண்ணில்மறை ஒலிபெருக எவ்வுயிரும் குதுகலிப்பப் புண்ணியக்கன் றனையவர்தாம் பொருமி அழு தருளினர். * அழுதருளினர் என்று அருமைப்பாடு தோன்றச் சேக்கிழார் பாராட்டுகிருர். உலகத்தில் உள்ள உயிர் கள் அழுது மயங்குவது போலன்றி, இந்தக் குழந்தை அம்மையின் ஞானப் பாலுக்காக ஏங்கி அழுதான். மணி அதரம்-அழகையுடைய வாயிதழ், கன்று-யானைக்கன்று.