பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானக் குழந்தை பிறந்த ஊர் 11. எல்லாக் காலத்தும், எல்லாவிடத்தும், எல்லா உயிர் களுக்கும் அம்மாவும் அப்பாவுமாக இருப்பவர்களைப் பார்த்து அழுதான். அவனுடைய அழுகைக்காகக் காத்து நின்ற தோணியப்பர் அம்பிகையுடன் விடை மேல் எழுந்தருளினர். அழுத பிள்ளே பால் குடிக்கும்' என்ற பழமொழி அன்றுதான் உண்டாயிற்றுப் போலும் ! உமாதேவியார் பொற்கிண்ணத்தில் திருமுலேப் பாலேக் கறந்து குழந்தைக்கு ஊட்டியருளி ஞர். அது மெய்ஞ்ஞானப் பாலாதலால் குழந்தைக்குச் சிவஞானம் உண்டாகிவிட்டது. மற்றப் பிள்ளைகளேப் போல் இருந்த நிலை மாறி ஞானப் பிள்ளை ஆளுன் : திருஞானசம்பந்தப் பெருமானக மாறினன். பாலே வழங்கியவுடன் தோணியப்பரும் அம்மை யும் மறைந்துவிட்டார்கள். கு ழ ந் ைத வாயில் பாலொழுக நின்று கொண்டிருந்தான். நீரில் மூழ்கிய தந்தையின் நினைவே மறந்து போயிற்று. இப்போது அவர் இந்தக் குழந்தையிடம் வந்தார். வாய்க் கடை யில் வழியும் பாலோடு பாலருவாயனுக நின்ற குழந்தையைக் கண்டு, யார் கொடுத்ததையோ வாங்கி உண்டு விட்டானே! என்ற கோபம் வந்தது, அவருக்கு. கையில் ஒரு கோலே எடுத்துக்கொண்டு, யோர் உனக்குப் பால் கொடுத்தார்கள்?’ என்று கேட்டார். குழந்தை அமைதியாக விடை சொன்னன். அந்த விடை வார்த்தையாக இருக்கவில்லை; இறைவன் திருவரு ளிலே ஊறி இறைவி அளித்த ஞானப் பாலின் சுவை யோடு கலந்து பாட்டாக வந்தது. அதோ அந்தக் கள்வன்தான்' என்று தன் விரலாலே சுட்டிக்