பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறை செல்வத் திருவாரூர் 173 ஞாபகம் வந்துவிட்டது. அங்கே நிகழும் விழாவின் நிஜனவும் தியாகேசப் பெருமானுடைய நினவும் உண்டாயின. "நான் எவ்வாறு ஆரூர்ப் பெருமானப் பிரிந்திருப்பேன்!” என்று ஏங்கினர். தாம் சங்கிலி யாருக்கு அளித்த உறுதிமொழியைப் புறக்கணித்து விட்டு, திருவாரூரை நோக்கிப் புறப்பட்டார். திரு வொற்றியூர் எல்லேயை நீங்கியவுடனே அவர் கண் கள் இரண்டும் ஒளியை இழந்தன. திருவொற்றியூர்ப் பெருமானே எண்ணி இரங்கிய சுந்தரர் ஆரூரின் மேல் இருந்த பேரன்பினுல் புறப்பட்டுவிட்டார். கண் இல்லாக் குருடராகச் சில தலங்களின் வழியே வந்த நாயனர் காஞ்சீபுரம் சென்று இறைவனைப் பாடி ஒரு கண்ணேப் பெற்றர். பிறகு பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவாரூரை அடைந்தார். முதலில் இந்தப் பரவையுண் மண்டளிக்கு வந்து இறைவனே வழிபட்டார். 'இறைவனே, உனக்குத் தொண்டு பூண்டவர் துக்கங்களைப் போக்கிப் பாதுகாக்க மாட்டாயா? என்று பாடினர். தூவாயா! தொண்டுசெய் வார்படு துக்கங்கள் காவாயா? கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும் காவாயால் உன்னையே கல்லன சொல்லுவேற்கு ஆவாஎன், பரவையுண் மண்டளி அம்மானே! (துரவாயன் என்னும் திருநாமம் உடைய பெருமானே, உனக்குத் தொண்டு செய்வார்கள் படு கின்ற துக்கங்களே அவரை அடையா வண்ணம் காக்க மாட்டாயா? என்னிடத்தே என் பலவீனத் தைக் கண்டு என் அறிவைப் பற்றிக்கொண்டு ஐந்து