பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறை செல்வத் திருவாகும் 17.5% இறைவன் கோயிலில் மூக்கை இழந்து துர்வாசர் உட்கார்ந்து கொண்டிருக்கிருர். - - - அவரா மூக்கை இழந்தார் ? அவருக்கு அவ: மானம் ஒன்றும் இல்லை. கோயிலும் கோபுரமும், விக்கிரகங்களும் சிற்பங்களும் தமிழ்நாட்டின் தனிப். பெருஞ் செல்வங்கள். இவற்றை உலகத்தில் வேறு: எங்கும் காணமுடியாது. இவற்றைப் பக்தியுடனும் கலே உணர்வுடனும் சமைத்தார்கள் முன்ஞேர்கள். இவற்றைப்போல.நம்மால் அமைக்க முடியாவிட்டா லும் இவற்றைப் பாதுகாக்கும் கடமையையாவது நாம் செய்துவரலாம். ஆனல் நம்முள் சிலர் துர்வாசர் மூக்கை உடைத்துத் தமிழர் மூக்கையே உடைத்துவிட்டார்கள். ஆம் இத்தகைய அற்புதப் படைப்புக்களைப் படைத்தவர் பரம்பரையில் வந்த நாம் இவற்றை உடைக்கத் தலைப்படுகிருேம். இதைக். காட்டிலும் அவமானம் வேறு உண்டோ? துர்வாசர் மூக்கிழந்த நிலையில் அமர்ந்து, நம்முடைய மூக்குப் போய் அவமானம் படைத்த நிலையைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிருர் ! திருவாரூருக்கு மேற்கே ஏழு மைல் தூரத்தில் கமலாபுரம் என்ற ஊர் இருக்கிறது. அதுவே சுந்தர ருடைய அன்னயாராகிய இசைஞானியார் பிறந்த ஊர் என்று சொல்கிருர்கள். திருவாரூர்த் தேர் மிகப்பெரியது, அதற்கு ஆழித் தேர் என்று பேர். இங்கே எல்லாமே பெரியவை. கோயில் ஐந்து வேலி குளம் ஐந்து வேலி. தியா கேசருக்குக் கழுநீர்ப் பூமாலே சிறப்புடையது; அதற். காகக் கழுநீரை வயலில் விளேத்தார்கள்; அந்தக்.