பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகுப் பயணம் - 6 . சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக் களத்திலிருந்து இறைவன் அனுப்பிய யானையின் மேல் ஏறித் திருக்கைலாயம் சென்ருர்’ என்று பெரிய புராணம் சொல்கிறது. திருவஞ்சைக்களத்துக்குப் போய் அங்குள்ள ஆலயத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. இப்போது நினைத்தால் எந்த ஊருக்கும் சென்று விடலாமே! பழைய காலமா? கட்டுச்சோறு கட்டிக்கொண்டு காடும் மலேயும் கடந்து பல நாள் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லையே! ஆனாலும் ஊர் எங்கே இருக்கிறதென்று தெரிந்து கொள்ள வேண்டாமா ? கேரள ராஜ்யத்தில் திருவஞ்சைக்களம் இருக்கிறது என்பது தெரியும். திருவாங்கூர், கொச்சி என்னும் இரண்டு ராஜ்யங் களில் திருவஞ்சைக்களம் எங்கே இருக்கிறது? அங்கே போய்ச் சுவாமி தரிசனம் செய்து கொண்ட வர்கள் சிலரே. ஆதலால் வழி சொல்கிறவர்களைத் தேடிப்பிடிக்க வேண்டியிருந்தது. "தி ரு ச் சூ ரி ல் இறங்கி முப்பத்தைந்து மைல் பஸ்ஸில் போய் ஓரிடத்தில் கழியைத் தாண்ட வேண்டும். கழியைத் தாண்டினல் கொடுங்கோளுரை அடையலாம். அதற்கு அருகே மூன்று மைல் தூரத்தில் திருவஞ்சைக் களம் இருக்கிறது. அங்கிருந்து பஸ் போக்குவரத்து உண்டு' என்று சிலர் சொன்னர்கள். சேக்கிழார் என்ன சொல்கிருர் என்பதையும் தெரிந்து கொள்ள வா. பா. - 12.