பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வாருங்கள் பார்க்கலாம் வேண்டாமா? அவர், “மலேநாட்டில் இருக்கிறது. கொடுங்கோளுர். அதற்கு மகோதையென்றும் ஒரு பெயர் உண்டு. அதைச் சார்ந்ததுதான் திருவஞ்சைக் களம். சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய தோழரும் சேர மன்னருமாகிய சேரமான் பெருமாள் நாயனர் இருந்து அரசாண்ட இடம் கொடுங்கோளுர்’ என்று சொல்கிருர், மாவீற் றிருக்த பெருஞ்சிறப்பின் மன்னும் தொன்மை மலைநாட்டுப் பாவிற் றிருந்த பல்புகழார் பயிலும் இயல்பிற் பழம்பதிதான் சேவிற் றிருந்தார் திருவஞ்சைக் கனமும் கிலவிச் சேரர்குலக் கோவிற் றிருந்து முறைபுரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளுர் என்று பெரிய புராணத்தில் அவர் சொல்லியிருக்கிருர். திருவஞ்சைக்களத்தைத் தன் ஒரு பகுதியாகப் பெற்றது, சேரர் குலமன்னர் பரம்பரை பரம்பரையாக இருந்து அரசாட்சி புரியும் ஊர் என்று இந்தப் பாட்டுச் சொல்கிறது அல்லவா ? திருச்சூர் என்பதும் ஒரு சிவஸ்தலம் என்று கேள்வியுற்றிருந்தேன். திருச்சிவப்பேரூர் எ ன் ற பெயரே குறைந்து திருச்சூர் என்று வழங்குகிறது. சிவப்பேரூர் வழியே கொடுங்கோளுரை அடைந்து அங்கிருந்து திருவஞ்சைக்களத்துக்குப் போகலாம் என்று எண்ணியிருந்தேன். பழங்காலத்தில்-சுந்தரமூர்த்தி நாயனர் கால மாகிய ஒன்பதாம் நூற்ருண்டில்-கேரளம் தமிழ் நாடாகவே இருந்தது. அப்புறமும் சேக்கிழார்