பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வாருங்கள் பார்க்கலாம் பற்றிப் பேச இப்போது வர இயலவில்லை. திரு வஞ்சைக்களத்துக்குப் போய்த் தரிசனம் செய்து கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குப் போகும் வழி என்ன?’ என்று எழுதி னேன். இப்படி இப்படிப் போக வேண்டும் என்று தெளிவாக விடை வருமென்று எதிர்பார்த்தேன். ஆணுல்-? உடனே கடிதம் வந்தது. "நீங்கள் எர்ணுகுளத் துக்கு வந்துவிடுங்கள். மற்றவற்றை யெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன். நான் இவ்வளவு காலம் இங்கே இருந்தும் திருவஞ்சைக்களம் போனதில்லை. உங்களோடு வந்து பார்க்க எண்ணுகிறேன்’ என்று நாகப்பன் எழுதியிருந்தார். பண்பாடு என்பது எப்படி எப்படியெல்லாம் உருவெடுக்கிறது பார்த்தீர்களா ? எனக்குப் பேரானந்தம் உண்டாகிவிட்டது. உடனே போட்டோக் கலைஞர் திரு.ராமகிருஷ்ண இனச் சென்னைக்கு வரச் செய்தேன். இருவரும் கொச்சி எக்ஸ்பிரஸ்ஸில் புறப்பட்டுவிட்டோம். எ ங்க ள் வரவைப்பற்றி ஒரு கடிதம் நாகப்பனுக்கு எழுதிப் போட்டுவிட்டு, எப்படிப் போகிறது, எது வழி, எவ்வளவு காலம் ஆகும் என்ற கவலைகளையெல்லாம் மறந்துவிட்டுப் புறப்பட்டேன். நேரே எர்ணுகுளம் போனேன். கொச்சி, எர்ணு குளம் என்ற இரண்டும் அருகில் இருப்பவை என்று அங்கே போன பிறகுதான் தெளிவாகத் தெரிந்தது. ‘அந்தப் பக்கங்களில் நூறு நூற்றைம்பது மைல் நீளத் துக்குக் கழிகள் இருக்கின்றன. இருமருங்கும்.அழகிய இயற்கை வளங்கள் இருக்கின்றன என்று யாரோ