பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகுப் பயணம் 181 சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன வார்த்தைகள் என் உள்ளத்தே எந்த விதமான உரு வத்தையும் பதிவு செய்யவில்லை, நேரே போய்ப் பார்த்து இன்புற்ருல்தான் தெளிவாக அந்தக் காட்சி கள் உள்ளத்தே பதிகின்றன. எர்ணுகுளத்துக்கும் கொச்சிக்கும் நடுவே இருப்பது ஒரு பெரிய கழிப் பகுதி. பாலத்துக்கும் இப்பால் எர்ணுகுளம் : அப்பால் கொச்சி. போன அன்று திரு நாகப்பனுடைய உதவியால் கொச்சியையும் எர்ணுகுளத்தையும் பார்த்தேன். கொச்சியில் இயற்கையாகவே கடற் பகுதி வளைந்து கொடுத்து ஒரு பெரிய ஏரியைப்போல இருக்கிறது. இந்த இயற்கைத் துறைமுகத்தில்தான் கப்பல்கள் வந்து தங்குகின்றன. கொச்சி நகரம் கேரள அரசாங் கத்தைச் சார்ந்தது. இந்தத் துறைமுகமும் அதைச் சார்ந்த காரியாலயங்களும் சென்னே அரசாங்கத்தைச் சார்ந்தன. அந்த அழகிய துறைமுகத்தைக் கண் டேன். எர்ணுகுளத்துக்கு அருகில் திருப்புனித்துறை என்ற ஊர் இருக்கிறது, அவ்விடத்தில் கொச்சி அரசர்களின் அரண்மனை இருக்கிறது. அங்கே மருமக்கள் தாயமுறைதான் இருந்து வருகிறது. அரச பதவிக்கு வரும் உரிமையுடைய பலர் கொச்சி யில் இருக்கிருர்கள். முதல் உரிமை இரண்டாம் உரிமை, மூன்ரும் உரிமை என்று அவர்களுடைய உரிமை எழுநூறு பேர் வரையில் இருக்கிறதாம். அவர் களேத் தம்பிரான்கள் என்று வழங்குகிருர்கள். திருப் புனித்துறை என்ற ஊர் பூர்ண நதி என்ற ஆற்றங் கரையில் இருப்பதால் அதற்கு அப் பெயர் வந்ததாம்,