பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வாருங்கள் பார்க்கலாம் சங்க காலத்தில் சேர அரசர்களுக்கு உரியதாகச் சொல்லப் பெறும் பொருநை, ஆன்பொருநை என் பதே அந்தப் பூர்ணு நதி என்று சில ஆராய்ச்சியாளர் கள் சொல்வார்கள். கேரள ராஜ்யத்து ஆலயங்களில் தூய்மை அதிகம். நான் திருப்புனித் துறையில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்றேன். அரசரான லும் மேலே ஆடையோ சட்டையோ அணிந்து கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. கோயில் வாசலில் நம் நாட்டில் உள்ளது போன்ற கோபுரத் தைக் காண இயலாது. தேரின் தட்டுப் போலவும் சீன தேசத்துக் கட்டிடங்களைப் போலவும் மரத் தினுல் அமைத்த ஒருவகையான கோபுரத்தைத்தான் காணலாம் விமானமும் மரத்தால் ஆனதே. சில: கோயில்களில் விமானத்தைச் செப்புத் தகடுகளால் வேய்ந்திருக்கிருர்கள். உள் பிராகாரம் மரத்தாலான சுவர்களே உடையது. அந்தச்சுவர் முழுவதும் ஆயிரக் கணக்கான இரும்பு அகல் விளக்குகளே அடித்திருக் கின்றனர். உற்சவ காலங்களில் அத்தனே விளக்கு களேயும் ஏற்றுகிருர்கள். ஒவ்வொரு கோயிலிலும் சந்நிதிக்குமுன் ஒரு மேடை இருக்கிறது. அதற்கு அப்பால் துவஜஸ்தம்பமும் அதற்கும் அப்பால் ஏழு அடுக்குள்ள பெரிய வெண்கலத் தீபமும் வைத்திருக் கிருர்கள். கோயிலைச் சுற்றி வலம்வரும் இடத்தில் கருங்கல்லால் தளம் அமைத்திருக்கிருர்கள். விடியற் காலேயிலேயே நீராடிவிட்டு ஆடவரும் மகளிரும் ஆலய தரிசனம் செய்துகொள்கிருர்கள். எவ்வளவு குளிரானுலும் அதற்கு அஞ்சுவதில்லை.