பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகுப் பயணம 183 அவர்களுடைய பக்தி பொதுவானது; சமரச நிலை யில் உள்ளது. பலருக்கு விஷ்ணு, சிவன் இரண்டு மூர்த்திக்கும் வேறுபாடு தெரியவில்லை. எந்தத் தெய்வமானுலும் அவர்களுக்கு அப்பன்தான். காளி கோயில்களில் எழுந்தருளியிருக்கும் அம்மையைப் பகவதி என்று சொல்கிருர்கள். மலேயாள பகவதி என்று இங்கே நாம் சொல்லிக்கொள்கிருேம் அல்லவா? மற்றப்படி எந்தச் சாமியானுலும் தனிப் பேர் இல்லை. திருப்புனித்துறைக் கிருஷ்ணனுக்குத் திருப்புனித்துறை அப்பன் என்று பேர்; எர்ணுகுளத் தில் உள்ள சிவபெருமானுக்கு எர்ணுகுளத்தப்பன் என்று பேர்; குருவாயூர்க் கிருஷ்ணனேக் குரு வாயூரப்பன் என்றும், வைக்கத்து மகாதேவனே வைக்கத்தப்பன் என்றும் வழங்குவது கேரள சம்பிர தாயம். திருப்புனித்துறைக் கிருஷ்ணன் வடிவழகு சொட்டும் பெருமான். திருமேனி முழுவதும் தங்கக் கவசம் சாத்தியிருந்தார்கள். திருமுகத்துக்குக்கூடக் கவசம் போடும் வழக்கம் மலேயாள தேசத்தில் இருக் கிறது. நான் போனபோது எர்ணுகுளத்தில் உற்சவம். உற்சவத்தில் தேரோ, இறைவன் பவனியோ இல்லை. வரிசையாக யானைகளே அலங்கரித்துக் கொண்டு வந்து நிறுத்துகிருர்கள். ஏராளமான பணச் செலவில் வெடியும் வாணமும் கொளுத்துகிருர்கள். எர்ணுகுளம் கோயிலில் மரச்சுவரில் பதித்திருந்த அத்தனை விளக்கு களையும் ஏற்றியிருந்தார்கள். ஒரே ஜோதிமயமாக இருந்தது அந்தக் காட்சி. கோயில் பிராகாரத்தில் ஓரிடத்தில் பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது.