பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வாருங்கள் பார்க்கலாம் மற்ருேர் இடத்தில் சிறுமியர் கிளிப்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். பின்னும் ஓரிடத்தில் ஒருவர் தலையில் பட்டுத் தலைப்பாகையுடன் கையை வீசிக் கொண்டு அங்கும் இங்கும் நடந்தபடியே கதாப் பிரசங்கியைப் போல ராகத்துடன் கதை சொல்லிக் கொண் டிருந்தார். பிரசாதமாகத் தீர்த்தமும் சந்தன மும் கொடுக்கிருர்கள். அந்தச் சந்தனத்தை நெற்றி யிலே விபூதியைப் போலத் தீற்றிக் கொள்கிருர்கள். பிரசாதம் தரும் பூசகர், கையில் படாமல் வீசி எறிகி ருா. எர்ணுகுளம் கோயிலில் மகாதேவர் சந்நிதி மாத் திரம் உண்டு; அம்பிகையின் சந்நிதி இல்லே. அந்தப் பக்கங்களில் எல்லாக் கோயில்களிலும் அப்பனேத் தான் தரிசிக்கலாமாம்; அம்மை அங்கே இருப்பதில்லே யாம். அம்மைக்குத்தான் தனியே கோயில் கட்டிப் பகவதி என்று வழங்குகிருர்களே! - எர்ணுகுளத்துத் தமிழ்க் கோயிலயும் பார்த்தேன்; தமிழ்ச் சங்கத்தைத்தான் சொல்கிறேன். திருக்குறள் வகுப்பை அன்று தொடங்கினர்கள். நான் ஒரு சொற் பொழிவு ஆற்றினேன். அமைதியான முறையில் தமிழ் அன்பர்கள் இந்தத் தமிழ்ச் சங்கத்தை நடத்தி வரு கிருர்கள். மறுநாள் காலையிலேயே திருவஞ்சைக்களம் புறப் படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருந்தார் நாகப்பன். தமிழ்ச்சங்கத்தின் ப்ாதுகாவலரில் ஒரு வரும் தமிழ்த் தெய்வமாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்களின் உறவினருமாகிய திரு முத்து சாமி ஐயர் என்ற அன்பர் எங்களுக்கு நல்ல விருந்து அளித்துத் தூங்க வைத்தார். - -