பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகுப் பயணம் 185 திருவஞ்சைக் களத்துக்குக் கழியில் இருபது மைலுக்குமேல் செல்ல வேண்டும். திரு நாகப்பன் இந்த யாத்திரைக்காகத் தனியே ஒரு விசைப் படகை ஏற்பாடு செய்திருந்தார். அது மட்டுமல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் படகில் ஏறித் திருவஞ் சைக் களத்துக்குப் போய் விவரங்களே விசாரித்தும் வந்திருந்தார். ஆகவே மறுநாள் காலை ஏழு மணிக்கு விசைப் படகில் திரு நாகப்பனுடனும் கலைமகள் போட்டோக் கலைஞர் ராமகிருஷ்ணனுடனும் வேறு சில நண்பர் களுடனும் புறப்பட்டேன். நண்பகல் உணவுகூட எங்களுடன் வந்தது. அந்தப் புளியோரையும், தயிருஞ்சாதமும் எங்கள் பசிக்கு எவ்வளவு சுகமாக இருந்தன என்பதை அன்று நடுப்பகலில் உணர்ந் தோம். எர்ணுகுளத்தில் கடலின் பகுதி தேக்கமாக இருக்கிறது. அதிலிருந்து நீண்ட அகன்ற கழி மைல் கணக்கில் பிரிந்து செல்கிறது. வெவ்வேறு திசையில் இந்தக் கழிகள் இருக்கின்றன. அந்தப் பக்கங்களில் பண்டங்களே மிக எளிதில் மலிவாக இந்தக் கழி களின் வழியாகக் கொண்டு வருகிருர்கள். நிலப் பாதையைப் போலவே இந்த நீர்ப்பாதையாகிய கழி கள் பயன்படுகின்றன. விசைப் படகுகளும், பாய் மரப் படகுகளும், தோணிகளும் இந்தப் புனற் சாலை யில் எங்கே பார்த்தாலும் ஒடிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் ஏறின விசைப் படகுக்கு அசோகா என்று பேர். அது ஏழு குதிரையாற்றல் உடையது. அதிக ஆழம் இல்லாத இடங்களில் அதைச் செலுத்த