பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 வாருங்கள் பார்க்கலாம் முடியாது. படகு புறப்பட்டது. மணிக்கு ஆறு மைல் வேகத்தில் சென்றது. சில இடங்களில் இன்னும் மெதுவாகச் சென்றது. கீழ்ப்பக்கத்தில் வானவெளி யில் சூரியன் தன் யாத்திரையைத் தொடங்கி யிருந் தான். அவனே அந்த நீர்ப் பரப்பினிடையில் இருந்து கொண்டு பார்ப்பதே ஒர் ஆனந்தம். கழியின் இரு மருங்கும் அடர்ந்த தென்னஞ்சோலேகள். அங்கங்கே சிறிய சிறிய ஊர்கள். தமிழ்நாட்டு நெய்தல் நிலத் தில் அத்தகைய வளப்பத்தைக் காண முடியாது. எங்கே பார்த்தாலும் தென்னமரந்தான். பெரிய கழியின் இடையில் சில திட்டுக்கள் இருக்கின்றன. அவற்றைத் துருத்தி என்று சொல் கிருச்கள். அது நல்ல தமிழ்ச் சொல். நாம் அதை மறந்துவிட்டோம்; நம்முடைய ம லே ந ட் டு ச் சகோதரர்கள் மறக்கவில்லை. ஆற்றுக்கு நடுவிலே உள்ள திட்டுக்குத் துருத்தி என்று பெயர். இலக்கியங் களில் இந்தச் சொல்லேக் காணலாம். அதற்கு உரை யாசிரியர்கள் ஆற்றிடைக் குறை” என்று பொருள் எழுதியிருப்பார்கள். இங்கே கழிகள், ஓடாத ஆறு களைப் போல இருக்கின்றன. அவற்றினிடையே உள்ள திட்டுக்களைப் பழந் தமிழ்ச் சொல்லால் துருத்தி என்று மலேயாளிகள் சொல்கிருர்கள். சில இடங்களில் பெரிய கழியிலிருந்து சிறிய கழி ஒன்று பிரிந்து வளைந்து சென்று மறுபடியும் வந்து கூடுகின்றது. இதனிடையே பெரிய தீவு இருக் கின்றது. இந்தக் கழியில் நடைபெறும் மிகவும் முக்கிய மான தொழில் மீன் பிடிப்பது. சில இடங்களில் மிகவும் உயரமான ஏற்ற மரத்தைப் போலச் சாய்வாக