பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகுப் பயணம் 187. இரண்டு மரங்களே நிறுத்தி வைத்திருக்கிருர்கள். அந்த இரண்டுக்கும் இடையிலே விரிவான வலையைக் கட்டி யிருக்கிருர்கள். அந்த மரங்களைத் தாழ்த்தி மீண்டும் மேலே எழச் செய்யும் வகையில் அந்த அமைப்பு இருக்கிறது. மரங்களேத் தாழ்த்தும் போது அந்தப் பெரிய வலை கழிக்குள் அமிழ்ந்து விடு கிறது. சிலபோது அப்படியே விட்டுவைத்து மறு படியும் மரத்தை நிமிர்த்துகிருர்கள், வலே மேலே எழுகிறது. அதில் பல மீன்கள் அகப்படுகின்றன. இந்தக் குதிரை மர வலைகளைச் சீனு தேசத்தில் அதிக மாகப் பயன்படுத்துகிருர்களாம் பெரிய படகுகளிய் சென்றும் சிறிய கட்டுமரத்தில் சென்றும் வலை வீசி மீன் பிடிக்கிருர்கள். அந்த வலைஞர்கள் எவ்வளவு லாகவமாக வலையை வீசுகிருர்கள்! ஒரு சிறிய கட்டு மரத்தில் தூண்டிலும் கையுமாக அமர்ந்து பொறுமை யோடு காத்திருக்கும் வலேஞர்களேயும் அங்கே காண லாம். விளையாட்டாகச் சிறிய பையன்கள் கூட ஒரு தூண்டிலேயும் ஒரு கட்டுமரத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்யிவிடுவார்கள் என்று தோன்றுகிறது. சில இடங்களில் கழி சிறிய கால்வாயைப் போல இருக்கிறது. இரு மருங்கும் உள்ள தென்னமரங்கள் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு கழியின்மேல் பச்சை விதானம் அமைத்தாற்போல நிற்கின்றன. நெடுந்துரத்துக்குத் தென்னங் குலைகளைக் கட்டிப் பச்சைப் பந்தல் போட யாரால் முடியும்? நெய்தல் நிலமகள் அங்கே அத்தகைய அழகுப் பந்தலைப் போட்டுக்கொண்டு கொலு வீற்றிருக்கிருள். கழியில் இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போவது மிக எளிது. கார்களைக்கூட ஒடத்தில்