பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#88 வாருங்கள் பார்க்கலாம் ஏற்றிக்கொண்டு வந்து விடுகிருர்கள். ஒரு கரையி லிருந்து மறு கரையில் உள்ள பள்ளிக்கூடத்துக்குச் சின்னஞ்சிறு குழந்தைகள் போகிருர்கள். எப்படித் தெரியுமா? சின்னக் கட்டுமரம், அதில் ஒரு துடுப்பு. நாலு பையன்களாகச் சேர்ந்து கொண்டு அதில் ஏறிக் கொள்கிருர்கள். அவர்களே துடுப்பினுல் ஒடத்தைத் தள்ளிக்கொண்டு போய் விடுகிருர்கள். ஒடக்காரன், காவற்காரன் என்ற பேச்சே இல்லை. நமக்கோ அந்தக் கழியைப் பார்த்தால் பாம்பு நடுவிலே கிடக்கிறது போலத் தோன்றுகிறது. அவர் களுக்கோ ஒரு வீதியிலிருந்து மற்ருெரு வீதிக்குப் போகிறது போல இருக்கிறது, கழியைக் கடப்பது. படகுகளில் எல்லாப் பண்டங்களும் வருகின்றன. விசைப் படகுக்குப் பின்னலே இரண்டு மூன்று பாரப் படகுகளே இணேத்து அவற்றில் பண்டங்களைக் கொண்டு போகிருர்கள். நோக்கும் நிதியம் பலனத் தனையும் கலத்தில் புகப்பெய்து கொண்டேற நுந்தி ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே ! என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிருர். அந்தக் காலத்தில் இப்படித்தான் பெரிய மரக்கலங்களில் பல வகையான விலையுள்ள பண்டங்களைக் கொண்டு போயிருக்க வேண்டுமென்று இந்தப் பாட்டிலிருந்து தெரிகிறதல்லவா ? முதலில் திருவஞ்சைக்களத்துக்குப் போய் விட்டுப் பிறகு கொடுங்கோளுர் போகலாம் என்று எண்ணினேம். ஆனல் அப்படிச் செய்ய முடிய