பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுங்கோளுர் ஆங்கிலத்தில் முற்காலத்தில் எழுதியுள்ள சரித் திரப் புத்தகங்களே எடுத்துப் பார்த்தால் போர்த்துக் கீசியர்களும் மற்றவர்களும் இந்தியாவின் மேல்கரை யிலே வந்து இறங்கின செய்தியைக் காணலாம். இந்தியாவை மேல்நாட்டினரின் சந்தையாக்குவதற்கு அஸ்திவாரமாகக் கப்பலில் வந்து இந்நாட்டை அடைந்த வாஸ்கோடகாமா கேரள நாட்டில்தான் வந்து இறங்கினன். அந்தச் சரித்திரங்களே வாசிக் கும்போது கிராங்கனூர், கிராங்கனூர் என்ற பெயர் அடிபடும். அது இன்ன ஊர் என்று தெரிந்துகொள் ளாமல் புத்தகத்தை மட்டும் படிக்கிறவர்களுக்கு அது குரங்கனூரோ என்ற ஐயம் தோன்றும். மேல்நாட்டு மக்கள் இந்த நாட்டுப் பெயர்கள் தம் வாயில் நுழையாமல் மாற்றி வழங்கிய பேர்கள் ஒன்ரு இரண்டா? வெள்ளேக்காரத் துரைமார்கள் அப்படி மாற்றியது அதிசயமன்று. இந்த நாட்டில் உள்ள கறுப்புத் துரைகளும் தங்கள் ஊர்களின் இயற்கையான பெயர்களே வெள்ளைத் துரைகளைப் போல மாற்றிச் சொல்வதில் இன்பம் கண்டார்கள். தூத்துக்குடி இன்னும் ட்யூடிகொரின் என்ற திருநாமத்தை உதிர்க்கவில்லை. திருநெல்வேலி இன்னும் சிலர் திருவாக்கில் டின்னவெல்லியாகவே இருக்கிறது. மெட்ராஸுக்குப் பக்கத்தில் ஸெட்ராஸ் என்ற ஊர் இருக்கிறதே, அது உங்களுக்குத் தெரியுமோ? பல பேருக்கு அப்படி ஒர் ஊர் இருப்பது தெரியாது. சதுரங்கப்பட்டணம் என்று