பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுங்கோளுர் 191 மகாபலிபுரத்துக்கு அருகில் ஒர் ஊர் இருக்கிறது. யாரோ ஒரு வெள்ளேக்காரன் வாக்கில் அது வர வில்லை. சதுரங்கப்பட்டணம் என்ற நீண்ட பெயரை லட், ஸ்ட், ஸ்ட் என்று திக்கித் திக்கி உச்சரிக்க முயன்று தடுமாறியிருக்கிறன். கடைசியில் மெட்ராஸ் பக்கத்தில் இருப்பதால் அதை ஸெட்ராஸ் ஆக்கிவிட் டான். இன்றும் அதை அப்படிச் சொல்லும் நாகரிகப் பேர்வழிகள் இருக்கிருர்கள், கிராங்கனுTர் என்பதும் அப்படித் துரை மக்கள் திருவாக்கில் உருமாறிய பெயர். அதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானுல் க்ராங்கனேர் (Cranganore) என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய புராணம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களில் வரும் கொடுங் கோளுரைத்தான் அப்படி வழங்கினர்கள்; இன்றும் கறுப்புத் துரைமார் சிலர் வழங்குகிருர்கள். மலையாளிகள் அதைக் கொடுங்ங்லூர் என்று சொல்கிருர்கள். அவர்கள் மெல்லினத்தில் ஆசை யுடையவர்கள். கொடுங்கல்லூர் என்பதே அப்படி உச்சரிக்கப் பெறுகிறது. கொடுங்கோளுர் மாகாத் மியத்தைப் பார்த்தால் அதைக் கோடிலிங்கபுரம் என்று சொல்லுகிறது. இப்படி வெவ்வேறு உருவத் தில் அந்த ஊருக்குத் திருநாமம் அமைந்தாலும் அதன் பழம் பெயர் கொடுங்கோளுர் என்பதுதான் ; அதற்கு மகோதை என்றும் ஒரு பெயர் உண்டென்று பெரிய புராணத்தால் அறிகிருேம். - இந்தக் கொடுங்கோளுர்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய தோழராகிய சேரமான் பெருமாள் நாயனர் இருந்து அரசாண்ட இடம். அந்தக் காலத் தில் இது பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும்.