பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 வாருங்கள் பார்க்கலாம் சேரமான் வாழ்ந்த இடத்தில் இன்றும் இடிபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பின்பு சொல் கிறேன். - - நாங்கள் கொடுங்கோளுருக்குப் போவது தெரிந்த அன்பர்கள்,'கொடுங்கல்லூர்ப் பகவதியைத் தரிசிக்கப் போகிறீர்களா ? மிகவும் சக்தியுள்ள தெய் வம்’ என்று சொன்னர்கள். அந்த ஊர் சேரமான் பெருமாள் ஊர் என்ருே. சுந்தரமூர்த்தி சுவாமிகள் வந்து தங்கியிருந்த ஊர் என்ருே அங்குள்ளவர்களுக் குத் தெரியாது. கொடுங்கோளுருக்கு இன்று உள்ள பெருமை அங்கே எழுந்தருளியிருக்கும் பகவதியில்ை தான். ஆகவே அந்தப் பகவதியின் திருக்கோயி லுக்குப் போனுேம் அந்தக் கோயிலும் எர்ணுகுளத் தில் உள்ள கோயிலப் போலவே இருக்கிறது. பகவதி அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிருள். சேவார்த்திகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிருர் கள். இந்தப் பகவதியைப் பற்றிப் பல பாட்டுக்கள் மலேயாளத்தில் இருக்கின்றன. முன்பு இங்கே பெளத்தர்களுடைய ஆதிக்கம் அதிகமாக இருந்த தாம். பிறகு ஹிந்துக்கள் அவர்களே ஒட்டிவிட்டார் கள். பெளத்தர்களைப் பச்சை பச்சையாகத் திட்டும் பாடல்களே முன்பு இங்கே பாடி வந்தார்களாம். அரசாங்கத்தார் அப்படிப் பாடுவதை நிறுத்தி விட்டார்களாம். பகவதியின் சந்நிதிக்கு முன்னே சண்டிகேசுவரி யின் விக்கிரகம் திறந்த வெளியில் இருக்கிறது. அந்த உருவத்தின்மேல் தவிட்டைப் போட்டிருந்தார்கள். பகவதிக்கு உயிரோடு ஆடுகளே வாங்கிவிடுவது வழக்கம். கோயிலில் உள்ள ஆடுகள் சண்டிகேசுவ