பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுங்கோளுர் 193 ரியின்மேல் அபிஷேகமாகும் தவிட்டை நாவால் வருடி உண்ணுகின்றன. அந்த அம்பிகைக்குத் தவிட்ட பிஷேகத்தைவிட இந்த ஆடுகளுடைய நாக்கின் பரிசம் அதிக இன்பத்தை அளிக்குமென்று தோன் றுகிறது. பகவதிக்கு அருகே இடப்பக்கத்தில் ஏழு மாதாக்களுடைய சந்நிதி இருக்கிறது. அவர்களோடு விநாயகரும் இருக்கிருர், சந்நிதியில் தெற்கு நோக்கிக் கோடிலிங்கபுரேசர் என்ற திருநாமத்தோடு சிவலிங் கப் பெருமான் எழுந்தருளியிருக்கிருர். பகவதி எட்டுக் கரங்களும் மூன்று கண்களும் கோரப் பற்களும் உடையவளாக வீற்றிருக்கிருள். அப்பெருமாட்டியின் உருவத்துக்குக் கீழே யந்திரங் களும் திருவாசியும் வைத்து வழிபடுகிருர்கள். வலப் பக்கத்தில் ஒரு கர்ப்பக்கிருகம் இருக்கிறது. பகவதி ஆயின் கர்ப்பக்கிருகத்திலிருந்தே அதற்கு வாயில் இருக்கிறது. ஆனால் அந்த வாயிலே அடைத்திருக் கிருர்கள். வாயிலுக்கு முன் திருவாசியை வைத்திருக் கிருர்கள். பகவதியின் கர்ப்பக்கிருகத்துக்கு வெளி அயில் மூடப்பட்டிருக்கும் திருக்கோயில் விமானம் இருக்கிறது, அதனுள் என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. - அங்கு ள் ள மணியகாரரை விசாரித்தேன். “இங்கே ஆதிசங்கராசாரியார் வந்து ஒரு சக்கரத் தைப் பிரதிஷ்டை செய்தார். அதைத்தான் இதற்குள் வைத்திருக்கிருர்கள். அது மிகவும் உக்கிரமாக இருந்ததனுல் வாயிலே அடைத்திருக்கிருர்களாம்” எ ன் ரு ர். இப்படி, “அடைத்திருக்கிருர்களாம்”, வைத்திருக்கிருர்களாம்' என்று சந்தேகக் குறிப் பாகிய ஆம் போட்டுச் சொல்லும் செய்திகளே வா. பா. - 13.