பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வாருங்கள் பார்க்கலாம் அப்படியே உண்மை என்று எடுத்துக் கொள்ளவும் முடியாது; எல்லாம் பொய் என்று தள்ளிவிடவும் முடியாது. ஒருவர் சொல்ல மற்ருெருவர் கேட்டுச் சொல்ல வருகிற இத்தகைய செய்திகளையே கர்ண பரம்பரைச் செய்திகள் என்று சொல்வார்கள். கண்ணினலே காண முடியாமல் காதினுலே கேட்டுக் கேட்டு வருவன என்பதனுல் அப்படிச் சொல்கிருர்கள். "சண்டிகேசுவரிக்கு ஏன் தவிட்டை அபிஷேகம் செய்யவேண்டும்?' என்று கேட்டேன். காச நோய் உள்ளவர்கள் இந்த அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொள்வார்கள். நோய் தீர்ந்தவர்கள் தம்முடைய பிரார்த்தனேயை நிறைவேற்றுவார்கள். அதுதான் இது' என்ருர் மணியகாரர். "தவிட்டினுல் அபிஷேகம் செய்வதாகவா பிரார்த்தனை செய்துகொள்வார்கள்?’ என்றேன். "ஆம்" என்று விடை வந்தது. காச நோய் தீர்ந்த பக்தர்கள் இடும் தவிடு அங்கே உள்ள ஆடு களுக்கு உணவாக உதவுகிறது. அன்பர்களுக்குக் காசமும் ஆடுகளுக்குப் பசியும் தீரும்படியாக அருள் செய்யும் ரீ சண்டிகேசுவரிக்கு ஒரு கும்பிடு போட்டு நகர்ந்தோம். கோயில் மணியகாரர் மற்ருெரு செய்தியைச் சொன்னபோதுதான் சற்று என் நினைவை இலக்கிய உலகில் புகுத்த வேண்டி வந்தது. "இந்தப் பகவதியைத்தான் கண்ணகி என்று சொல்கிருர்கள்' என்ருர் அவர். யாரோ தமிழ் நாட்டுக்காரர்களே அந்தச் செய்தியை அவர் காதில்