பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுங்கோளுர் 195 போட்டிருக்க வேண்டும். கண்ணகி க்ாளியின் அவதாரம் என்று தமிழ்நாட்டுக் கோவலன் கதையும், இலங்கை நாடோடிப் பாடல்களும் சொல்கின்றன. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் அப்படிச் சொல்லாவிட்டாலும் வேட்டுவவரியில் ஒரு குறிப்பு வருகிறது. கோவலனும் கண்ணகியும் மதுரையை நோக்கி நடந்து வரும்போது இடையில் பாலே நிலத்தின் வழியே செல்ல நேர்ந்தது. கடுவெயிலாக இருந்தமை யால் அங்கே இருந்த துர்க்கை கோயிலின் ஒரு பக்கத் தில் ஒதுங்கியிருந்தனர். அப்போது அந்நிலத்தில் இருந்த வேட்டுவர் கூடித் துர்க்கைக்குப் பூசையிடத் தொடங்கினர். துர்க்கையைப் பூசிக்கும் பூசாரிச்சி ஆவேசம்வந்து ஆடத் தொடங்கினுள். கணவனேடு அங்கே தங்கியிருந்த கண்ணகியைக் கண்டு, 'இவள் கொங்கச்செல்வி; மேற்கு மலைப்பகுதிகளை உடை யவள்; தென் றமிழ்த்தாய் தவத்தால் பெற்றவள், என்று பாராட்டினுள். கணவளுேடு இருந்த மணமலி கூந்தல், "இவளோ, கொங்கச் செல்வி, குடமலை யாட்டி, தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து, ஒருமா மணியாய் உலகுக் கோங்கிய திருமா மணி" எனத் தெய்வமுற் றுரைப்ப என்று இளங்கோவடிகள் சொல்கிருர். இதன் உரை யில் அரும்பத உரையாசிரியர், மேற்பட்டு இவளைத் தெய்வமாகக் கொண்டாடும் இடம் கூறினபடியாலே இவள் துர்க்கையாகவே பிறந்தாள் என்றவாறு? என்று எழுதுகிறர். இதல்ை கண்ணகி துர்க்கையின்