பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 வாருங்கள் பார்க்கலாம் அவதாரம் என்ற ஒரு செய்தி அரும்பதவுரைகாரர் காலத்தே வழங்கிய தென்பது தெரியவரும். சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் கண்ண கிக்குத் திருக்கோயில் சமைத்தான் என்று சிலப்பதி காரம் கூறுகிறது. வஞ்சி என்பது திருவஞ்சைக் களம், கொடுங்கோளுர் முதலிய ஊர்கள் சேர்ந்த பகுதியே என்று ஆராய்ச்சியாளர் சொல்கின்றனர். சேரர் மரபில் வந்த சேரமான் பெருமாள் இருந்து அரசாண்டது கொடுங்கோளுர் என்று பெரிய புரா ணக்காரர் சொல்கிறர். அவர் காலத்தில் வஞ்சி என்ற வழக்கு மாறிவிட்டது போலும். இலங்கையில் பத்தினித் .ெ த ய் வமாக க் கண்ணகியை வணங்குகிருர்கள்; பெளத்தர்களும் ஹிந்துக்களும் வேறுபாடின்றி வழிபடுகிருர்கள். கண்ணகிக்கு முதல் முதலில் கோயில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன். அதன் பின்னரே கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்னும் அரசன் கண்ணகியை வழிபட்டான். அக்காலத்தில் பெளத்தர்கள் இலங் கையில் கண்ணகி வழிபாட்டை நடத்தியதோடன்றி மூலத் திருக்கோயிலப் பார்க்கக் கொடுங்கோளுருக் கும் வந்திருக்கலாம். அங்கே வந்து தங்கியபோது தம் சமயப் பிரசாரத்தையும் செய்திருக்கலாம். அது கண்டு வெறுப்புற்ற மலைநாட்டு மக்கள் அவர்களை வைது பாடல்களைப் பாடியிருக்கலாம்; கேரளத்தில் இன்னும் அப்பாடல்கள் வழங்குகின்றன. இப்போது பெளத்தர்களுக்கும் கொடுங்கோளுருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அப்படியிருந்தும் இக் கோயிலுக்கு வருகிறவர்கள் பெளத்தர்களைப் பச்சை பச்சையாக வைவதற்குக் காரணம், அந்தப் பழங்கால நிக்ழ்ச்சிகளென்றே தோன்றுகிறது. х