பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுங்கோளுர் 197 கொடுங்கோளுர்ப் பகவதி என்று இன்று வழி படும் திருவுருவமே பழைய விக்கிரகமாக இருக்க வேண்டும் என்பதில்லை. மூடிக்கிடக்கும் அறையில் அந்தப் பழைய திருவுருவம் இருந்தாலும் இருக்கலாம். பகவதியின் கோயிலுக்குப் புறம்பே ஒரு பக்கத் தில் கூேடித்திரபாலராகிய பைரவருடைய கோயில் இருக்கிறது. மற்ருெரு பக்கத்தில் ஜ்வரமாலினி என்ற தேவதையின் கோயில் இருக்கிறது. தமிழ் நாட்டு மாரியம்மனப்போல அம்மை நோய் வந்தால் அந்தத் தேவதையை வழிபடுவார்களாம். பாண்டி நாட்டில் 'மழைவறங் கூர்ந்து வறுமை எய்தி வெப்பு நோயும் குருவும் தொடரக் கொற்கை யில் இருந்த வெற்றிவேற் செழியன் கண்ணகியை வழிபட்டதாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. வெப்பு நோய் என்பது ஜூரம்; குரு என்பது அம்மை. வேர் வையால் தோற்றும் சிறு கொப்புளத்தை வேர்க்குரு என்று சொல்கிருேம். வேர் என்பது வேர்வை; குரு என்பது நீர்க் கொப்புளம். அம்மையும் கொப்புள மாதலால் அதற்குப் பழம் பெயர் குரு என்பது. கண்ணகி கோயிலுக்கும் அம்மைக்கும் தொடர்பு உண்டு என்ற செய்தியோடு, கொடுங்கோளுரில் உள்ள வழக்கத்தையும் ஒப்புநோக்கினுல் இங்கே கண்ணகியின் திருக்கோயில் இருந்திருக்கலாம் என்ற கருத்து வலிமை பெறும். - வெகுதூரம் ஆராய்ச்சி உலகத்துக்குப் போய் விட்டேன். நாம் இப்போது சுந்தரமூர்ந்திகளின் வரலாற்றைஒட்டித் தலயாத்திரைசெய்கிருேம். ஆகை யால் அதிகமான ஆராய்ச்சியில் தலையிட்டுக்கொண் டால் தலைவலிதான் ஏற்படும்.