பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வாருங்கள் பார்க்கலாம் கொடுங்கோளுர்ப் பகவதிக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக்கொண்டோம். “தாயே, திரு வஞ்சைக் களத்தைத் தரிசிக்க வந்திருக்கிருேம். நேரே அங்கே போக முடியாமல் கழியில் உள்ள நீர் வற்றியிருக்கிறது. உன் அருளால் இனி நீர் மல்க வேண்டும். திருவஞ்சைக்களத் தரிசனமும் இனிது கிடைக்க வேண்டும்' என்று வேண்டிக்கொண் டேன். அர்ச்சனை செய்கிற அடிகள் இருவரும் மணியகாரரும் திருவிழாவுக்கு வாருங்கள் என்று சொன்னர்கள். மணியகாரர் தமிழ் பேசுகிறவர். அவர் பல செய்திகளே எங்களுக்குச் சொன்னர். திருவொற்றி யூரில் அம்மன் கோயிற் பூசகர் நம்பூதிரி என்றும், அவருக்கும் இங்கே உள்ள நம்பூதிரிக்கும் உறவுண் டென்றும் சொன்னுர், பூஜை செய்கிறவர்கள் நம்பூதிரிகள் ; நமக்காக அர்ச்சனே செய்கிறவர்கள் அடிகள். அவர்கள் அப் பாவிகள் ; மலையாளம் பேசுகிறவர்கள். அவர்களே யும் ஒரு படத்திற் பிடித்துப் போட்டுக்கொண்டு விடை பெற்றுத் திருவஞ்சைக்களத்தை நோக்கிப் புறப்பட்டோம்.