பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு கைஞ்சைக்களம் § * சுந்தரமூர்த்திநாயனர் அவிநாசியிலிருந்து மலே நாட்டுத் திருப்பதிகளே வணங்கிவிட்டு வந்துகொண் டிருக்கிருர்’ என்ற செய்தி கிடைத்தபோது சேரமான் பெருமாளுக்கு ஒரே குதுாகலம் உண்டாகிவிட்டது. அவரோடு பல தலங்களுக்குச் சென்று ம், திருவாரூரில் சுந்தரர் வீட்டில் தங்கியும், அவரைத் தம்முடைய வஞ்சிமா நகருக்கு அழைத்து வந்து சில காலம் பலவகை உபசாரங்களேச் செய்து வைத்தி ருந்தும் இன்புற்ற அவருக்கு மறுபடியும் நம்பியாரூர ரோடு காலம் கழிக்கலாம் என்ற ஆர்வம் பெருகியது. உடனே ஊராரெல்லாரும் அவரை மரியாதையோடு எதிர் கொண்டு அழைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தார்கள். சேரர் சுந்தரர் வரவை முரசடித்துத் தெரிவிக்கச் செய்தார். - செய்வ தொன்றும் அறியாது சிங்தை மகிழ்ந்து களிகூர்ந்து, “என் ஐயன் அனந்தான் ; என ஆளும் அண்ணல் அனந்தான் ஆரூரிற் சைவன் அணைந்தான் ; என்துணையாம் தலைவன் அனர்தான் ; தாணியெலாம் உய்ய அனேக்தான் அனர்தால்"என்று ஓசை முரசம் சற்றுவித்தார் என்று சேக்கிழார் பாடுகிருர். அமைச்சர்களோடும் பெரியோர்களோடும் சுந்தரரை எதிர்கொண்டுசென்று