பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வாருங்கள் பார்க்கலாம் வர வே ற் ரு ர். தமிழின் பெருமாளாகிய அவரைச் சேரமான் பெருமாள் யானேயின் மேல் ஏற்றித் தாம் பின் அமர்ந்து குடை பிடித்தார். என்ன அன்பு: ஊர் முழுவதையும் மக்கள் அலங்கரித்திருந்: தார்கள். எங்கும் தோரணங்கள்; வாழை, கமுகு, முதலிய மரங்கள்; கொடிகள் இருமருங்கும் இசைக் கருவிகள் முழங்க, அந்தணர் மறையொலி எழுப்ப, நடனமாதர் நடமிட, சங்கும் முரசமும் முழங்கச் சுந்தரர் திருவீதி வழியே எழுந்தருளினர். அவரை அரண்மனை வாயிலில் இறக்கிக் கை லாகு கொடுத்து உள்ளே அழைத்துச் சென்ருர் சேரர் பிரான். சிங்காதனத்தில் அமரச் செய்து உபசாரம் செய்தார். அவருடைய வருகையைக் கொண்டாடிப் பொன்னும் மணியும் வாரி வழங்கினர். சுந்தரர் வஞ்சியில் தங்கி அப் பகுதியிலுள்ள தலங்களுக்குப் போய்த் தரிசித்துக்கொண்டு வந்தார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்கும் சென்று வழி பட்டார். அவருக்கு உலக வாழ்க் கை இனிப் போதும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இறைவ னுடைய கட்டளேப்படி இவ்வுலகில் திருவவதாரம் செய்தவர் அவர். இறைவன் வரையறுத்த காலம் நிறைவேறும் சமயம் வந்துவிட்டது. ஆகவே, திருவஞ்சைக் களத்தில் ஒருநாள் தரிசனம் செய்து, விட்டுத் திருப்பதிகம் பாடுகையில் தம் கருத்தை வெளியிட்டார். இனி இங்கே மனே வாழ்க்கையை மேற்கொண்டிருத்தலை வெறுத்தேன். இவ்வாழ்க் கையை இனி நிறைவுறுத்த வேண்டும்” என்ற குறிப்பை அமைத்துப் பாடினர்.